Advertisement

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

பச்ச மிளகா!
காரத்துக்கு என்று மட்டுமே நாம் அறிந்த பச்சை மிளகாயில், பல மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போமா...
* பச்சை மிளகாய், கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது. கலோரிகளையும் கூட எரித்து விடும்
* வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளன
* உணவில், பச்சை மிளகாயை சேர்ப்பதால், செரிமானம் வேகமாக நடைபெறும்
* நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது
* இவற்றில், ஆன்டி பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளன. இதனால், தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக, சரும தொற்றுகள் நீங்க, உதவுகிறது
* இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளதால் பெண்கள் உட்கொள்வது நல்லது
* வைட்டமின் ஈ சத்தும் அதிகமாக உள்ளதுடன் சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிகின்றன. இதனால், நல்ல சருமத்தை பெறலாம்.
* இதிலுள்ள வைட்டமின் சி, இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது
இனி, பச்சை மிளகாய் வெறும் காரத்துக்கு உரியது என்று எண்ண மாட்டீர்கள் தானே... ஆனால், மிக குறைந்த அளவே, சேர்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால்...

பனிக்கட்டி கறுப்பா?
குளிர் மிகுந்த நாடுகளில், இரவில் பனிப்பொழிவால் ஏற்படும் ஒருவகை நிகழ்வு, 'கறுப்பு பனிக்கட்டி' எனப்படுகிறது.
காற்று குமிழ்கள், பனி துகள்களை சுற்றி உருவாகும். இத்தகைய பனிக்கட்டிகள், ஒளி ஊடுருவும் வகையிலும், சில சமயம் ஒளி ஊடுருவாத வகையிலும் காணப்படும். எனவே, இருளில் அரிதாகவே தென்படும். தார் பூசிய சாலையில், பரப்பை ஒட்டி காணப்படுவதால், இவை கரிய நிறமாக தோன்றும்.
கறுப்பு பனிக்கட்டி நிகழ்வு, அதிக குளிர்ச்சி நிலவும் காலங்களில் உருவாகிறது. வெப்பமடைந்த சாலை, வெப்பத்தை வெளியிடும் போது பனித்துகள்கள் உருக ஆரம்பிக்கும். அது நள்ளிரவு சமயத்தில் மீண்டும் குளிர்ந்து உறைவதால், சாலையில் மென்படலமாக உருவாகிறது. கறுப்பு பனிக்கட்டி சாதாரண பனிப்படலமாக தோன்றும்; இதன் மீது வாகனம் ஓட்டி செல்லலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement