Advertisement

'மயக்கவியல் டெக்னீசியன்' வேலை

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை மெடிக்கல் சர்வீஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் எம்.ஆர்.பி., அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக காலியாக உள்ள 77 மயக்கவியல் டெக்னீசியன்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: எம்.ஆர்.பி.,யின் அனஸ்தீசியா டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிளஸ்2 அளவிலான படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல்/விலங்கியல் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்று அதன் பின்னர் அரசு மருத்துவ கல்வி நிறுவனம் நடத்தும் மயக்கவியல் தொடர்புடைய ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
பணியிடம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏதாவது ஒன்றில் பணியாற்ற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.500. கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாக செலுத்த வேண்டும். மொபைல் வாலட் மூலமாகவும், இந்தியன் வங்கிக் கிளைகளில் சலான் மூலமாகவும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணபிக்க கடைசி நாள்: 2017 மே 29.
விபரங்களுக்கு: www.mrb.tn.gov.in/pdf/03_MRB_Anaesthesia_Technician_Detailed_Notification.pdf

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement