Advertisement

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 131 காலியிடங்கள்

எரிசக்தித் துறையில் பிரசித்தி பெற்ற நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 131 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: இந்தி டிரான்ஸ்லேட்டரில் 8, எக்சிகியூடிவ் இன்ஜினியரில் 44, டெபுடி எக்சியூடிவ் இன்ஜினியரில் 39, டெபுடி சீப் இன்ஜினியரில் 15, ஜெனரல் சூப்ரண்டெண்டில் 1, டெபுடி மெடிக்கல் ஆபிசரில் 4, டெபுடி ஜெனரல் மேனேஜரில் 7, அடிஷனல் சீப் மேனேஜரில் 6, டெபுடி சீப் மேனேஜரில் 6 காலியிடங்கள் உள்ளன.
வயது: இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து பிரிவு வாரியாக வயது நிர்ணயங்களை அறியவும்.
கல்வித் தகுதி: இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு, ஏ.எம்.ஐ.இ., எம்.பி.பி.எஸ்., சி.ஏ., எம்.பி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பு போன்றபடி விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.300.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்காணல் போன்ற முறைகளில் இருக்கும்.
கடைசி நாள்: 2017 மே 30.
விபரங்களுக்கு: <https://www.nlcindia.com/new_website/careers/nlcil_detailed_advt032017.pdf>

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement