Advertisement

தேதி சொல்லும் சேதி

மே 15, 1859 - பியரி கியூரி பிறந்தநாள்
சகோதரருடன் சேர்ந்து அழுத்த மின் விளைவை (Piezo Electric Effect) கண்டறிந்தார். கதிரியக்கத்தைக் கண்டறிந்ததற்காக இயற்பியலில் நோபல் பரிசு வென்றார். ரேடியம், பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார்.

மே 15, 1993 - சர்வதேச குடும்ப நாள்
குடும்பத்தைச் சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறைகளைத் தடுப்பது போன்ற விழிப்புணர்வுகளைக் குடும்பங்களில் ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மூலமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மே 17, 1749 - எட்வர்ட் ஜென்னர் பிறந்தநாள்
மருத்துவர், அறிவியலாளர். பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இந்த அரிய மருந்துக்குக் காப்புரிமை பெறாமல் இலவசமாக வழங்கினார். 'தடுப்பூசிகளின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.

மே - 17, 1934 - உலக தொலைத்தொடர்பு நாள்
உலகம் முழுவதும் இணைப்பை உருவாக்கியதில், தொலைத்தொடர்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உலக தந்தி சங்கம் 1865ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் சங்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மே 18, 1913 - நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்தநாள்
இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர். 1977 -- 1982 வரை பதவி வகித்தார். ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சர். போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவரும் இவர்தான்.

மே 18, 1978 - அனைத்துலக அருங்காட்சியக நாள்
அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களைச் சந்திக்கவும், சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து விழிப்புணர்வைக் கொண்டு வரவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையால் நடத்தப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement