Advertisement

பூசணிக்காய் விக்கலையோ, பூசணிக்காய்

இவ்விளையாட்டு, பாவனையை அடிப்படையாகக் கொண்டது. 'பூசணிக்காய்' விளையாட்டில், தோட்டக்காரியாக ஒருவர் நடிக்க வேண்டும். மற்றவர்கள், தோட்டக்காரியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும். இதேபோல், வியாபாரிகளாக சில சிறுமிகள் நடிக்க வேண்டும்.
இப்போது, வியாபாரம் செய்வதற்கு ஒரு சிறுமி வர வேண்டும். தோட்டக்காரியிடம் வந்து, பூசணிக்காய் இருக்கா? என்று அவள் கேட்பாள்.
'இல்லை. இப்போதான் பூ பூத்திருக்கு' என்று தோட்டக்காரி கூற வேண்டும். மறுபடியும் வேறொரு சிறுமி வந்து, 'பூசணிக்காய் இருக்கா' என்று கேட்க வேண்டும்.
'இப்பத்தான் பிஞ்சு விட்டிருக்கு' என்று தோட்டக்காரி சொல்ல வேண்டும்.
மறுபடியும் வேறொரு சிறுமி வந்து கேட்கும்போது, 'இல்லை, காயாக இருக்கு' என்று சொல்ல வேண்டும்.
இப்படியே அறுவடைக்குத் தயாராகும் வரை உள்ள ஒவ்வொரு பருவமாகக் கூற வேண்டும். கடைசியாக, பூசணிக்காய் தயாராகும்போது, பூசணிக்காயை விற்க வேண்டியதுதான். இப்போது, வியாபாரி வந்து கேட்கும்போது, 'உங்களுக்கு எந்த பூசணிக்காய் வேண்டும்' என்று தனக்குப் பின்னால் உள்ள சிறுமியர்களை கைகாட்டி கேட்க வேண்டும். வியாபாரி, எந்த சிறுமியை கைகாட்டி வேண்டும் என்று கூறுகிறாரோ, அதை விலை பேசி விற்க வேண்டும். பின்னர், வியாபாரிகள் (சிறுமிகள்), பூசணிக்காய் சிறுமியை அப்படியே தூக்கிச் சென்று, சமைத்து சாப்பிடுவது போல் நடிக்க வேண்டும்.
இதன்மூலம், விவசாயிகளின் உழைப்பையும், உணவின் அருமையையும் பிள்ளைகளால் உணர்ந்துகொள்ள முடியும். பூசணிக்காய் மட்டுமின்றி, பானை, பைக், கார் என்று எந்தப் பொருளை வேண்டுமானாலும் பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, விளையாடலாம். இதனால், பொருட்களை உற்பத்தி செய்வது குறித்தும், பேரம் பேசும் திறமையும், உழைப்பின் மதிப்பும் குழந்தைகளின் மனதில் பதியும்.
- மு.கோபி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement