Advertisement

மழை வருது, மழை வருது உப்ப அள்ளிட்டு போங்க...

சிறுவர், சிறுமியர் இருபாலரும் விளையாடும் உப்பு ஆட்டத்தில், எவ்வளவு பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். எண்ணிக்கை தடையில்லை. உதாரணத்திற்கு, பத்து பேர் இருந்தால், ஐந்து ஐந்தாகப் பிரிந்து கொள்ளவும். ஒரு குழுவின் பெயர் உப்பு. மற்றொன்றின் பெயர் கல் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

கடல் சார்ந்த பகுதிகளில் விளையாடப்படும் உப்பு விளையாட்டு, அதே பெயரில் மற்ற இடங்களிலும் விளையாடப்படுகிறது. சுறுசுறுப்பான, விறுவிறுப்பான இவ்விளையாட்டு அலுக்கவே அலுக்காது.

பெரிய திடலாக இருந்தால், விளையாட்டும் சுவாரஸ்யமாக இருக்கும். விளையாடும் பகுதியை இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு அணியினரும், எதிர் எதிர் திசைக்கு பிரிந்து சென்றுவிட வேண்டும். அப்போது, 'மழை வரப்போகுது... மழை வரப்போகுது... உப்புக்கல்ல அள்ளிகிட்டு போங்க' என்று கூறிக்கொண்டே ஓட வேண்டும்.

அணியினர் இப்போது, தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மணலையோ, மண்ணையோ எடுத்து சிறுசிறு குவியலாக உருவாக்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

எதிரணியினரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத இடத்திலும், தூர தூரமாகவும் மணற்குவியலை ஏற்படுத்த வேண்டும். இரண்டு அணியினரும், ஐந்தோ அல்லது பத்து நிமிடங்களுக்கு இவ்வாறு மணல் குவியல் ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். நேரம் முடிந்ததும், மணல் குவியல் உருவாக்குவதை கைவிட்டு விட வேண்டும்.

இப்போது, 'மழை விட்டிருச்சு, மழை விட்டிருச்சு' என்று ஓர் அணி பாட, 'வெயில் வந்துட்டு வெயில் வந்துட்டு, வெளியே வாங்க' என்று பாட வேண்டும். அப்படியே இரண்டு அணியினரும் இடம்மாறிக் கொள்ள வேண்டும். நூறு வரை எண்ண ஆரம்பித்தவுடன், இருதரப்பும் எதிரணியினர் குவித்த மணல்குவியலை, வேக வேகமாக கண்டுபிடித்து எண்ண வேண்டும்.

யார் அதிகமாக எண்ணுகிறாரோ அந்த அணிக்கே அதிக புள்ளி. எண்ணி முடித்ததற்கு அடையாளமாய், அந்த மணல் குவியலை கலைத்து விட்டுவிட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள், இருதரப்பில் யார் அதிகமாய் மணல்குவியலை எண்ணியுள்ளனர் என்பதை கணக்கெடுக்க வேண்டும். எத்தனை மணல் குவியல் கலைக்கப்படாமல் உள்ளதோ, அவ்வளவு புள்ளிகள் அந்தந்த அணியினருக்கு சேரும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement