Advertisement

மகராசனம் - மாணவர்களுக்கான யோகப்பயிற்சிகள்

'மகரம்' என்றால் முதலை. முதலை ஓய்வெடுப்பது போல் ஓய்வாகப் படுத்திருப்பதால், இந்த ஆசனத்திற்கு இப்பெயர் வந்தது.
செய்முறை:
ஆரம்ப நிலை:
• குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
• கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
• கைகளை தலைக்கு மேலே தரையில் நீட்டி வைத்துக் கொள்ளவும்.
• தாடையை தரையில் வைத்துக் கொள்ளவும்.
1. முதலில், கால்கள் இரண்டையும் அகட்டி, குதிகால்களை உட்பக்கமாகத் திருப்பி, விரல்களை வெளிப்பக்கமாக வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு கைகளை மடக்கி, வலது உள்ளங்கையை இடது தோளிலும், இடது உள்ளங்கையை வலது தோளிலும் வைத்துக் கொண்டு, தாடையை இரண்டு கைகள் இணையும் இடத்தில், நன்றாகத் தளர்த்தி வைத்துக் கொள்ளவும்.
3. பத்து முறை சீராக வயிற்றை உபயோகித்து, மூச்சை இழுத்து விடவும்.
4. பின்னர் மெதுவாக தாடையை கையிலிருந்து உயர்த்தி, கைகளை விடுவித்து, கால்களை சேர்த்து ஆரம்ப நிலைக்கு செல்லவும்.
பயன்கள்:
1. இந்த ஆசனத்தில் கழுத்து, முதுகெலும்புகள், தசைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.
2. வயிற்றில் இருக்கும் தசைகள் ஓய்வடைந்து ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
3. மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.
4. மூச்சை இழுத்து விடும்போது, வயிறு மேலும் கீழும் அசையும்போது, முதுகுக்கும் இடுப்புக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது.
5. ஆஸ்த்மா, மூச்சிறைப்பு உள்ளவர்களுக்கு, இது மிக நல்ல ஆசனம்.
- ஆர்.தங்கலஷ்மி
விவேகானந்த கேந்திரம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement