Advertisement

நாத்திக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!

காலில் முள் குத்தினாலே, வலியில், எல்லா கடவுள்களையும் உதவிக்கு அழைப்போருக்கு மத்தியில், 20 வயதில், மோட்டோர் நியூரான் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வலது கையின் இரு விரல்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டுடன் மட்டுமே, 75 வயது வரை வாழ்ந்து வரும், ஸ்டீபன் ஹாக்கிங், கடவுள் இல்லை என்று சவால் விட்டு, வாழ்ந்து வருகிறார்.
தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, விஞ்ஞான சிந்தனைகளால், உலகை வியக்க வைக்கும் இவர், ஊனமுற்றவர் என்று, மூலையில் முடங்கி விடவில்லை. சீனா பெருஞ்சுவரை சுற்றிப் பார்ப்பது, நீர் மூழ்கி கப்பலில், கடலுக்கு கீழே பயணிப்பது என்று, எப்போதும், சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
'வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனர்; அவர்கள் பூமிக்கு வருகின்றனர்...' என்று கூறும் இந்த நாத்திக விஞ்ஞானியின், ஆசை என்ன தெரியுமா... விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே!
ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (31)

 • Indian - salem,இந்தியா

  இவருடன் இருந்து அவர் இவர்

 • pius - Nagercoil,இந்தியா

  நாம் கடவுளுடைய பிள்ளைகள், அப்படியென்றால் அந்த பிள்ளைகளுக்கு ஏன் கஷடத்தை கொடுக்கணும். பொல்லாத அப்பா ஏன் கண்ணில்லாமல் காதில்லாமல் படைக்க வேண்டும்????????????? கடவுள் ஒரு சாடிஸ்ட்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  விஞ்ஞானமும் எல்லைகளையுடையது .....

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  இவரு பெரிய விஞ்ஞானி இல்லை ன்னு சொல்லலை. பெரிய விஞ்ஞானியா இருந்திருந்தா நல்லா இருக்கும் ன்னு சொல்லறேன்.

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  அறிவியல் அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவருமே கடவுள் என்ற ஒன்று இல்லை என்றும், கடவுள் மற்றும் மதம் ஆகியவை மனிதனால் உண்டாக்கப்பட்டவை என்றும் அறிந்தவர்கள். ஆனால் அதை வெளிப்படையாக சிலர் மட்டுமே சொல்வதன் காரணம், அவர்கள் சிறுவயதில் இருந்தே அவரவர் மதங்களை சேர்ந்த கடவுளை வழிபட்டு வளர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் வயது மற்றும் மனமுதிர்ச்சி அடைந்தவுடன், கடவுள் என்ற ஒன்று உள்ளதா இல்லையா என்று ஆராய்ந்து அறிகின்றனர். மேலும் கடவுள் இல்லை என்ற உண்மையை அவர்கள் சொன்னால், அது பல கலவரங்களை உண்டாக்கும். குறிப்பாக கடவுளை நம்பும் கும்பல் சண்டை இட்டுக்கொள்ளும். என்னுடைய மதத்தின் கடவுள்தான் உண்மையில் உலகை படைத்தார், அவர்தான் கடவுள். அவர் எங்கோ இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் இதுவரை கடவுளை கொண்டதாகவோ, ஏன் உணர்ந்ததாகவோ கூட ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டால் கடவுள் எங்கும் இருப்பான், யாருக்கும் தென்படமாட்டான், உனக்குள் இருப்பான் என்றெல்லாம் அலப்பறை கொடுப்பார்கள் ஒழிய நேரடியான பதில் இருக்காது. கடவுளை நம்பியவன் மட்டுமல்ல கடவுள் இல்லை என்று சொல்பவனும் வாழ்வாங்கு வாழவில்லையா? உண்மையில் கடவுள் என்ற ஒன்று இருந்திருந்தால் இதுவரை வாழ்ந்து மடிந்த, கடவுளை நம்பிய ஒருவனுக்குக்கூடவா கடவுள் தென்படவில்லை??? கடவுள் இருப்பதாக சொல்லப்படும் மத வழிபாட்டுத்தலங்களை கடவுள் இருக்கிறார் என்று சொல்பவன்தான் அழிக்கிறான். மனித இனம் தோன்றி சிந்திக்க தொடங்கிய காலத்தில் இயற்கையின் செயல்பாடுகள்தான் அவற்றை யாரோ செயல்படுத்துவதற்காக எண்ணி, அதுதான் கடவுள் என்று துவங்கியது. பிறகு வந்த சில மூடர்கள், மனிதர் இடையே இனம் மற்றும் மத வேறுபாடுகளை உண்டாக்கி அவரவர்க்கு என்று ஒரு கடவுளை உண்டாக்கினார்கள். கடவுள் என்ற ஒன்று மனிதன் படைத்தது. மதங்கள் இவ்வுலகில் இல்லை என்றால், கடவுளே இல்லை. ஆனால் இயற்கை என்றும் இருக்கும். வேண்டுமானால் இயற்கையை கடவுளாக மதிக்கலாம். இயற்கையை அழிக்காமல் இருக்க அந்த மூட நம்பிக்கை ஒருவகையில் உதவும். அதைவிட்டுவிட்டு கல்லையும், சிலையையும், மனிதன் வரைந்த படங்களையும் கடவுளாக வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளை விட தீமைகளே மிக அதிகம் என்பதை உணரவேண்டும். இவன் வேறு மதத்தை சேர்ந்தவன், வேறு கடவுளை துதிப்பவன் என்று வேறுபாடு பார்க்கும் அறிவிலிகள், அதே வேறு மனிதனால் ஆதாயம் கிடைத்தால் மட்டும் ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள்??? எளிய சான்று வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்ற நாட்டவர். நான் கடவுளை நம்புகிறேன். என்னை அவர் காப்பாற்றுவார் என்றால், விபத்தில் அடிபட்டவுடன் ஏன் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். கடவுளை மட்டுமே வழிபட வேண்டியதுதானே. விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் என்ன நம்புகிறார்கள் என்பது மட்டும் முக்கியம் அல்ல. அனைவரும் கடவுள் என்ற ஒரு விடயத்தால் என்ன பலன் என்பதை அறியவேண்டும்.

  • Jay - SFO,யூ.எஸ்.ஏ

   நீங்கள் அப்பாவி அல்ல அனைத்தும் அறிந்த அதி மேதாவி. இன்று காலை நான் இந்த பக்கத்திற்கு வந்தவுடன் இவ்வளவு பெரிய கருத்து தானாக வந்திருந்தது. இதனை அப்பாவி தமிழன் என்ற ஒரு நபர் தட்டச்சு செய்து அனுப்பி இருப்பார் என்பது கற்பனை. எப்படியோ கணிப்பொறியும், இணையமும் வந்து யூனிகோட் முறையில் தட்டச்சு செய்யும் செயலி தானே தோன்றியது. இதற்கு பின் விஞ்ஞானிகள் உள்ளனர் என்று ஒரு அறிவற்ற கூட்டம் நம்பும். அதனை நாம் ஏற்க வேண்டாம். இது சரி என்றால் இயற்கை தானே வந்தது, செயல்படுகின்றது என்ற உங்கள் கருத்து உண்மை. திடீரென்று செயற்கைகோள்கள் பறக்கின்றன, மருத்துவ புரட்சி நடக்கின்றது, இருப்பினும் இதெல்லாம் விஞ்ஞானிகள் காரணம் என்பது யாரோ நம்மைப் போன்ற ஒருவன் நம்பும் மூட நம்ம்பிக்கையே. இவர்கள் கண்டுபிடித்ததை நீங்கள், நான் பார்த்துள்ளோமா? என்ன சரியாய் அப்பாவியாரே?

 • abdul rajak - trichy,இந்தியா

  . இறைவன் மனிதர்களுக்கு பெறுபரிசல் நெர்வ் சிஸ்டம் தில் இருந்து குறை ஏற்பட்டால் சரி செய்து கொள்ள சக்தி அளித்து உள்ளான் . அதே நேரத்தில் மோட்டோர் நியூரான் என்பது சென்ட்ரல் நெர்வ் சிஸ்டம் தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு வருவது . இதை மனிதனால் குண படுத்த இயலாது . இறைவன் தான் குணப்படுத்த வேண்டும் . மனிதன் மற்றும் எல்லா யார் பிராணிகளின் முன் நெற்றி குடுமி என சொல்ல கூடிய முன் பக்க மூளை இறைவன் கையில் உள்ளது . அதே போல் உயிர் என்பது ஒரு வித சப்தம் . இதுவும் இறைவன் கையிலே உள்ளது . யாராலும் இறைவனை மிகைக்க முடியாது .

 • Karthik - New Jersey,யூ.எஸ்.ஏ

  விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்ற உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்.

 • sulochana kannan - AUKLAND,நியூ சிலாந்து

  Intha vignani enna kandupidithara ... athainthedi therinthu kolla kooda mudiyatha namaku adhu edhukku... kavalaya vidunga..

 • Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அவரு ஒரு பெரிய விஞ்ஞானி. அதுல ஒரு சந்தேகம் இல்ல. ஆனா, கடவுள் என் இவரை இப்படி படைச்சான்? இந்த அப்பா, அம்மாக்கு எப்படி பிறக்க வெச்சான்? அப்பா அம்மாவை செலக்ட் செய்றா சக்தி இருந்தா, நல்ல அப்பாவை அம்மாவை செலக்ட் செஞ்சு , உடம்புல ஊனம் இல்லாம பிறக்கலாமே? தன்னுடைய விதியை பிறப்பதற்கு முன்னாடியே நிர்ணயம் செய்ய முடிஞ்சா, கடவுள் எதுக்கு?

  • Manian - Chennai,இந்தியா

   மரபணு மாற்ற கோளாறுகள் சுற்று சூழ் நிலையால் வருவது. யாருக்கு வரும் என்பது உன்பே நிச்சாயிக படுவதில்லை. குறிப்பிடட காலம், குறிப்பிட்ட நிலையில் வெகு சிறிது இடத்தில் இவை நேரலாம். மேலும்,சுமார் 10,000 வருஷங்களுக்கு முன்பு இருந்த 200 (சுமார்) குடும்பங்களிலிருந்து நாம் தோன்றினோம். தாயை தவிர மற்றவர்கள் இணைந்ததால் பிறந்த நாம் முன்னோர்கள் இனசேர்க்கையில் இந்த குறைகள் ஏற்படடன. மேலும் அவர்கள் கற்கால மனிதர்களுடன் உடல் உறவு வைத்து சேலை பாக்ட்டிரியாக்கள், வரசுகளையும் பெர்ரத்ஹப்கள், மூளை வளர்ந்து இன்றுள்ள நிலைக்கு வந்தாலும், அவர்களிடம் இருந்து பெற்ற மரபணு கோளாறுகளும் இருந்து உள்ளது. ஆனால், தன் குறைகள் மீது சுய பச்சாதாபம் இல்லாமல், சிந்தனை செய்தே பெரும் விஞ்சானி ஆனது போற்றத்தக்கதே. கணித கோட்ப்பாடுகளின் கட்டு கோப்பு, அவரை முறைகளால், அவர் கடவுள் இல்லை என்று நம்புகிறார். கடவுளே அதை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை.

  • Jay - SFO,யூ.எஸ்.ஏ

   நீங்க எந்த அடிப்படையில சொல்லறீங்க?

  • Manian - Chennai,இந்தியா

   மின் வலை தளத்தில் மனித மரபணு, கணிதமும் கடவுளும் என்று சுமார் 50 ஆராச்சி கட்டுரைகளும், மரபணு நிபுணர்களிடம் சிலரிடம் நெறி கேட்டு அறிந்தது. வெறும் மூடத்தனத்தால் எழுதியதில்லை. என்னை பற்றி நான் தெர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே காரணம். மேலும், அடிப்படை ஆராய்சசிகள் செய்த சில அடக்கமான விஞ்ஞானிகள் பலரை அறிந்து கொள்ளும் பாக்யத்தால் அறிந்தது. வெறும் ஏட்டு கல்வியால் இல்லை. சுமார் 2 -3 நேரம் தினமும் தேடுதல் நடக்கிறது. கற்றதை பகிர்ந்து கொள், வெறும் வாய் வார்த்தையால் தாங்க யூ சொல்லாதே என்ற என் ஆசிரியர்கள் சொன்னதை செய்கிறேன். நம்புவது இல்லை என்பது உங்கள் விருப்பம். காசில்லாத சேவை இது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  உண்மையாகவே கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆதங்கம் தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement