Advertisement

அம்மா என்றால் அன்பு!

கணவன் மற்றும் சுற்றத்தார் இல்லாத நிலையிலும், ஒரு தாய், தனக்கான துணையாக கருதுவது, அவளது குழந்தையை மட்டுமே! அக்குழந்தையே அவளுக்கு ஊன், உயிர் எல்லாம். இதற்கு உதாரணமாக, தாய்ப் பாசத்தின் பெருமையை கூறும் கதை இது:
ஓர் குடிசை வீட்டில், தன் கைக்குழந்தையோடு பாயில் படுத்திருந்தாள், ஒரு தாய். அக்குடிசையில் நெருப்பு பற்றியதை பார்த்த தெருவாசிகள், அவள் பெயரைச் சொல்லி எழுப்பினர்; அவள் எழுந்திருக்கவில்லை. கம்பால் கதவை தட்டினர்; அவள், அசையக் கூடவில்லை. அப்போது, ஒருவர், அருகில் இருந்த செடியிலிருந்து, ஒரு பூவை பறித்து, அவள் அருகில் படுத்திருந்த குழந்தை மீது போட்டார்; உடனே, திடுக்கிட்டு விழித்து, குழந்தையை வாரி எடுத்து அணைத்தாள், தாய்.
தன் குழந்தை மீது, பூ விழுந்தால் கூட, தாயால் தாங்க முடிவதில்லை; அதுதான், தாய்ப் பாசம்!
ஜோல்னா பையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement