Advertisement

சவுகார்பேட்டை பட்டியாலா லஸ்சி!

சென்னை, சவுகார்பேட்டையில், பானிபூரி, பாவ்பாஜி, சப்ஜி, கச்சோரி மற்றும் சமோசா என, வட மாநில உணவுகளுடன், 'பட்டியாலா' என்ற குங்குமப்பூ லஸ்சியும் பிரபலம். மஞ்சள் நிறத்தில், ஐஸ் கட்டிகள் மிதக்க, விழுங்கும் போது, தொண்டைக்குள் இதமாக இறங்குகிறது.
மிதமான புளிப்பும், அளவான இனிப்பும் சேர்ந்து, நாக்கின் சுவை, மொட்டுக்களை தூண்டி, உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க செய்கிறது; மாவு போல் நாவில் படரும் கெட்டி தயிரின் சுவைக்கு, யாரும் மயங்காமல் இருக்க முடியாது.
இங்குள்ள மின்ட் தெருவில், சாலையோர கடை நடத்தும், தினேஷ் சோனி, ''தயிரில், வெறும் சர்க்கரை மட்டும் சேர்த்து, லஸ்சியை தயாரிப்பதில்லை; கெட்டி தயிருடன், சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் சிறிதளவு பால்கோவா சேர்த்து, நாங்களே வீட்டில் தயாரிக்கிறோம்...'' என்றார்.
பஞ்சாப்பில், இந்த பானத்தை அருந்துவதற்கு, பெரிய, 'சைஸ்' சொம்புகளையே பயன்படுத்துவர். கால் லிட்டர் கொள்ளளவு உள்ள இவற்றுக்கு, 'பட்டியாலா டம்ளர்' என்று பெயர். அதைவிட, சற்று சிறிய டம்ளரில் (850 மி.லி.,) லஸ்சியை கொடுக்கின்றனர். முதல் முறை, டம்ளரின், பாதியளவிற்கே தருகின்றனர். பாதி குடித்தாலே, வயிறு நிரம்பி விடும் என்பதால், அதை காலி செய்த பின், மீதியை கொடுக்கின்றனர்.
குளிர் காலம், கோடை காலம் என்றெல்லாம் கணக்கில்லை; அனைத்து நாட்களிலும் காலை, 7:00 மணியில் இருந்து, இரவு, 9:00 மணி வரையிலும் லஸ்சி கிடைக்கிறது.
தினேஷ் சோனி மொபைல்:எண் 98405 12252

மு.ஆதவன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • A. Sivakumar. - Chennai,இந்தியா

    சூப்பர்

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    என்னய்யா இது? கால் லிட்டர் ன்னா 250 மில்லி. இங்க 850 மில்லி ஆனா சின்னதும் அதுல பாதி... கால் லிட்டர் தயிர் குடிச்சா ஒடம்பு என்னத்துக்காகறது? இப்ப எல்லாம் பால் அந்த அளவு நல்லதில்ல ங்கராக. சில பேரு ஒரு படி மேல போயி பாலே அசைவம் ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement