Advertisement

இப்படியும் ஒரு சமூக கட்டமைப்பு!

முன்னாள் பிரதமர் நேரு கையில் இருந்து, மலர் மாலை வாங்கியது, குற்றம் என்று கூறி, தங்கள் சமூகத்தில் இருந்து விரட்டப்பட்டார், ஆசிவாசி இளம் பெண் ஒருவர்.
டிச., 6, 1959ல் மேற்கு வங்க அணை திறப்பு விழாவுக்கு வந்த நேரு, புதியா என்ற, 17 வயது ஆதிவாசி பெண்ணை வைத்து, அணை திறப்பு விழாவை துவக்கி வைத்ததுடன், தனக்கு போடப்பட்ட மலர் மாலையை, புதியாவிடம் கொடுத்தார்.
இதுவே, புதியாவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. காரணம், சந்தாள் இன ஆதிவாசிப் பெண்ணுக்கு, ஒருவர் மலர் மாலையை கொடுத்தால், அவர், அவள் கணவன் ஆகிவிடுவார். அதனால், சந்தாள் சமுதாயத்தில் இருந்து விரட்டப்பட்டாள், புதியா.
இதனால், பீஹாருக்கு சென்ற புதியா, அங்கு, சுதீர்தத்தா என்பவரை திருமணம் செய்து, மூன்று குழந்தைகளுக்கு தாயானார். இன்று, 75 வயதான புதியாவால், இன்னும் வங்காளம் திரும்பி, தன் இன மக்களுடன் சேர முடியவில்லை.
ஜோல்னாபையன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement