Advertisement

விளையாட்டு

ஜனவரி
* உலக சாதனை: பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 1009 ரன் (ஜன. 5) எடுத்து, முதல் வீரர் என, உலக சாதனை படைத்தார் மும்பை
மாணவர் தன்வாடே
ஜன. 8: பிரிஸ்பேன் தொடரில், இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்.
ஜன. 10: சென்னை ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, 'ஹாட்ரிக்' கோப்பை வென்றார்.
ஜன. 11: 'பிபா' சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினாவின் மெஸ்சி, ஐந்தாவது முறையாக தேர்வானார்.
* சானியா 'நம்பர்-1' டென்னிஸ் அரங்கில் இந்தியாவின் சானியா, ஹிங்கிஸ்(சுவிட்சர்லாந்து) இணைந்து 10 தொடர்களில் கோப்பை வென்றனர். இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 40 வாரங்கள் (ஜன. 11) உலகின் 'நம்பர்-1' வீராங்கனையாக சாதனை படைத்தார் சானியா.
ஜன. 15: இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, சிட்னி சர்வதேச டென்னிசில் 11வது கோப்பை வென்றது.
ஜன. 24: மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து சாம்பியன்.
ஜன. 31: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஆண்கள் அணி, 'டுவென்டி-20' தொடரை (3-0) வென்று சாதனை.
* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பெண்கள் அணி, 'டுவென்டி-20' தொடரை (2-1) வென்று சாதனை.

பிப்ரவரி
பிப். 1: உலக கோப்பை (19 வயது) போட்டியில், நேபாளத்துக்கு எதிராக ரிஷாப் 18 பந்தில் அரைசதம் அடித்து சாதனை.
* 'தெற்காசிய' வல்லரசு: அசாமின் கவுகாத்தியில் 12வது தெற்காசிய விளையாட்டு கலைநிகழ்ச்சியுடன் துவங்கியது (பிப். 5). இதில் 308 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த இந்தியா, 'வல்லரசாக' பிரகாசித்தது.
பிப். 8: தெற்காசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தங்கம்.
* ஒருநாள் அரங்கில் இருந்து பிரண்டன் மெக்கலம் (நியூசி.,) ஓய்வு.
பிப். 14: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொடரில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி கோப்பை வென்றது.
பிப். 20: கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 54 பந்தில் சதம் (எதிர்-ஆஸி.,) அடித்து, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உலக சாதனை.
பிப். 24: டெஸ்ட் அரங்கில் இருந்து பிரண்டன் மெக்கலம் (நியூசி.,) ஓய்வு.
பிப். 26: 'டுவென்டி-20' தொடரில் இந்திய பெண்கள் அணி, இலங்கையை வீழ்த்தி (எதிர்-இலங்கை) கோப்பை வென்றது.

மார்ச்
மார்ச் 3: நியூசிலாந்து கிரிக்கெட் 'ஜாம்பவான்' மார்டின் குரோவ், 53, மரணம்.
மார்ச் 4: உலக கோப்பை 50 மீ., 'பிஸ்டல்' துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜித்து ராய் தங்கம்.
* 'ஆசிய சாம்பியன்': மார்ச் 6: வங்கதேசத்தின் மிர்புரில் ஆசிய கோப்பை 'டுவென்டி-20' கிரிக்கெட் பைனல் நடந்தது. மழையால் 15 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய வங்கதேச அணி 120/5 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி, 13.5 ஓவரில் 122/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மார்ச் 8: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
* 'குத்துவதில் சூரன்' : மார்ச் 13: இங்கிலாந்தின் லிவர்பூலில் விஜேந்தர் சிங்(இந்தியா), அலெக்சாண்டர் ஹார்வத்(ஹங்கேரி) மோதிய குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில், விஜேந்தர் சரமாரியாக விட்ட குத்தில் நிலைகுலைந்த ஹார்வத், 3வது சுற்றிலேயே வீழ்ந்தார்.
மார்ச் 19: 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.
மார்ச் 27: 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை சாய்த்தது ஆப்கானிஸ்தான்.
மார்ச் 30: 'டுவென்டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது.

ஏப்ரல்
ஏப். 3: 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், இங்கிலாந்தை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்.
ஏப். 12: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-1 என வீழ்த்தியது.
ஏப்.17: ஒருநாள், சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து ஹெராத் (இலங்கை) ஓய்வு.
ஏப். 19: உலகின் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கான லாரஸ் விருதை டென்னிசில் ஜோகோவிச் (செர்பியா), செரினா (அமெரிக்கா) தட்டிச் சென்றனர்.
* 'வச்ச குறி தப்பாது': சீனாவில் உலக கோப்பை வில்வித்தை (ஏப். 27) நடந்தது. 'ரிகர்வ்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி 686 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார். இதற்கு முன், தென் கொரியாவின் பெய் (2015) 686/720 புள்ளி பெற்றிருந்தார்.
ஏப். 28: வெஸ்ட் இண்டீசின், டுபாகோ வீரர் ஈராக் தாமஸ், உள்ளூர் 'டுவென்டி-20' போட்டியில் 21 பந்தில் சதம் விளாசி சாதித்தார்.

மே
* கிரிக்கெட்டின் குரல்: மே 11 'கிரிக்கெட்டின் குரல்' என போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வர்ணனையாளர் டோனி கோசியர், 75, மரணம்.
மே 15: ஆசிய ஸ்குவாஷ் தொடரில் தீபிகா, ஜோஷ்னா உள்ளிட்டோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
* தலைவர் தாகூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக பொறுப்பேற்ற சஷாங்க் மனோகர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பி.சி.சி.ஐ., தலைவராக அனுராக் தாகூர் (மே 22) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மே 23: ஆசிய '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்.
மே 29: ஒன்பதாவது ஐ.பி.எல்., ஐதராபாத் அணி கோப்பை வென்றது.
* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ெதாடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.

ஜூன்
* சபாஷ் பயஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில் (ஜூன் 3) இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி வென்றது. இதுவரை 10 கலப்பு இரட்டையர், 8 ஆண்கள் இரட்டையர் என 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினார்.
ஜூன் 4: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் முகுருஜா கோப்பை வென்றார்.
ஜூன் 5: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் கோப்பை வென்றார்.
* சுலோவாகியாவில் நடந்த தடகளப் போட்டியின் 4*400 மீ., ஓட்டத்தில் அஷ்வினி, பூவம்மா அடங்கிய இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.
ஜூன் 12: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் கோப்பை வென்றார்.
ஜூன் 15: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.
ஜூன் 18: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்திய அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஜூன் 23: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கும்ளே நியமனம்.
ஜூன் 27: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணி சாம்பியன்.

ஜூலை
ஜூலை 4: கனடா ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்.
* முகமது அலி 'குட்-பை' : அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி, 74, ஜூன் 4ல் சுவாசக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். இவர் பங்கேற்ற 61
போட்டிகளில் 56ல் வெற்றி பெற்றார். இவரது இயற்பெயர் கேசியஸ் மார்செல்லஸ் கிளே. 1980ல் சென்னை வந்த இவர், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.
ஜூலை 6: விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்தின் பெடரர், 'கிராண்ட்ஸ்லாம்' அரங்கில் அதிக வெற்றிகளை (307) பதிவுசெய்து சாதனை.
ஜூலை 9: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கோப்பை வென்ற அமெரிக்காவின் செரினா, அதிக கிராண்ட்ஸ்லாம்(22) பட்டம் வென்ற ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்தார்.
ஜூலை 10: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2வது முறையாக கோப்பை வென்றார்.
ஜூலை 15: சீனாவில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹரிகா சாம்பியன்.
* ஆசிய பசிபிக் சூப்பர் 'மிடில்-வெயிட்' குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார் இந்தியாவின் விஜேந்தர் சிங்.
ஜூலை 17: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'ஆசிய-ஓசியானா குரூப் 1' பிரிவில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி, உலக குரூப் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

ஆகஸ்ட்
ஆக. 1: புரோ கபடி லீக் தொடரின் பாட்னா அணி சாம்பியன்.
ஆக. 5: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி துவக்கம்.
ஆக. 12: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் கோப்பை வென்றார்.
தீப ஒளியாய் தீபா: ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்' பிரிவு பைனலில் (ஆக. 14) ஆபத்தான 'புரோடுனோவா' சாகசம் புரிந்த, இந்தியாவின் தீபா கர்மாகர் 4வது இடம் பிடித்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.
* 'ஹாட்ரிக்' தங்கம்: பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான 100, 200, 4*100 மீ., ஓட்டப் பந்தயத்தில் உலகின் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட், ஆக.20ல் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். மூன்று ஒலிம்பிக்கில் (2008, 2012, 2016), மூன்று ஓட்டப்பிரிவிலும் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.
ஆக. 21: பிரேசிலில் நடந்த 31வது ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு.
ஆக. 22: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

செப்டம்பர்
செப்.3: பியுர்டோ ரிகோ அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 4-1 என வென்றது.
செப். 4: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் வென்ற அமெரிக்காவின் செரினா, 'கிராண்ட்ஸ்லாம்' ஒற்றையர் பிரிவில் ('ஓபன் எரா') அதிக வெற்றிகளை (307) பெற்று சாதனை.
*'துப்பாக்கி' ஓய்வு: செப். 4 ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு.
செப். 12: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா சாம்பியன்.
* துாள் கிளப்பிய துாத்துக்குடி: தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' பைனலில் (செப். 18, சேப்பாக்கம்) துாத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இதில், துாத்துக்குடி அணி வெற்றி பெற்று முதல் கோப்பை வென்றது.
* 'பாரா' பெருமை : பிரேசிலின் ரியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. பெண்கள் குண்டு எறிதல் 'எப்-53' பிரிவு இறுதிப் போட்டியில் (செப்.12) இந்தியாவின் தீபா மாலிக், 4.61 மீ., துாரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளி வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
தங்கம் 'ஈட்டி'னார்: ரியோ பாராலிம்பிக் 'எப்-46' பிரிவில் (செப்.14) இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, 63.97 மீ., துாரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம், பாராலிம்பிக் அரங்கில் (2004- ஏதென்ஸ், 2016- ரியோ) ௨ தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
செப். 30: ஆசிய கோப்பை (18 வயது) ஹாக்கி பைனலில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.

அக்டோபர்
அக்.6: இத்தாலியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் இந்திய வீரர் ஜித்து ராய் வெள்ளி வென்றார்.
அக். 14: டில்லிக்கு எதிரான லீக் போட்டியில் மகாராஷ்டிரா அணியின் சுவப்னில் (351*) அன்கித் (258*), ரஞ்சி கோப்பை அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனை படைத்தது.
அக். 29: நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரை 3-2 என கைப்பற்றியது.

நவம்பர்
நவ. 12: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புதிய தலைவராக ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ரா தேர்வு.
* ஆதித்தி ஆதிக்கம்: அரியானாவின் குருகிராமில் இந்தியன் ஓபன் (நவ. 13) கோல்ப் தொடர் நடந்தது. இதில், இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 213
புள்ளிகள் பெற்று கோப்பை வென்றார். இத்தொடரில் பட்டம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
நவ.17: இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் தொடரில், ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீரர் தரம்பிர் சிங்கிற்கு போட்டிகளில் பங்கேற்க
8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
நவ. 20: சீன ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை சிந்து, சீனாவின் சன் யுவை வீழ்த்தி கோப்பை வென்றார்.
நவ. 21: உலக 'டூர்' பைனல்ஸ் தொடரில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி கோப்பை வென்றார்.
* இந்தோனேஷிய ஓபன் கோல்ப் தொடரில் இந்திய வீரர் ககன்ஜீத் புல்லர் சாம்பியன்.
நவ. 26: ரஷ்யாவில் நடந்த உலக 'யூத்' குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (49 கி.கி.,) இந்திய வீரர் சச்சின் சிங் தங்கம் வென்றார்.
நவ. 28: டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் அர்ஜென்டினா அணி குரோஷியாவை வீழ்த்திய
முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
நவ. 30: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்- ஹசல் கீச் திருமணம் நடந்தது.

டிசம்பர்
டிச. 4: ஆசிய கோப்பை 'டுவென்டி-20' பைனலில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை சாய்த்து 6வது முறையாக சாம்பியன் ஆனது.
டிச. 13: உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருதை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
* பெங்களூருவில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி கோப்பை வென்றார்.
டிச. 18: கொச்சியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்,. கோல்கட்டா அணி கோப்பை வென்றது.
டிச. 19: இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதித்தார்.
டிச. 24: ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தமிழக அணி தகுதி.
டிச. 29: செர்பிய டென்னிஸ் வீராங்கனை இவானோவிச் ஓய்வு.

முர்ரே முதலிடம்: டென்னிஸ் அரங்கில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ஆதிக்கம் செலுத்தினார். விம்பிள்டனில் கோப்பை வென்ற இவர், ரியோ ஒலிம்பிக் ஒற்றையரில் தங்கத்தை வசப்படுத்தினார். தரவரிசையில், செர்பிய வீரர் ஜோகோவிச்சை முந்தி, முதல் முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement