Advertisement

அறிவியல்

புதிய தனிமங்கள்கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும், 'பீரியாடிக் டேபிள்' எனும் தனிம அட்டவணையில், புதிதாக 4 தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தனிம அட்டவணையில் புதிய தனிமத்தை சேர்ப்பதற்கு, ஐ.யு.பி.ஏ.சி., என்ற சர்வதேச வேதியியல் அமைப்பு பொறுப்பு வகிக்கிறது. புதிய தனிமத்தை கண்டுபிடித்தவர், இந்த அமைப்பிடம் விண்ணப்பித்தால், அதன் விஞ்ஞானிகள் குழு பரிசீலித்து, தகுதியிருந்தால், உலகுக்கு அறிவிக்கும்.புதிய தனிமங்களுக்கு, 113, 115, 117 மற்றும் 118 ஆகிய அணு எண்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்கள் முறையே நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னிசைன் மற்றும் ஓகானிசன். இதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் கண்டறிந்துள்ளன.
ஆ(ட்)டிய போகிமான் கோஇந்த 2016ம் ஆண்டில் உலகின் கவனத்தை ஈர்த்த ஒன்று தான் 'போகிமான் கோ' இது ஒரு அலைபேசி விளையாட்டு. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இது மற்ற விளையாட்டுகளை போல இருந்த இடத்திலேயே விளையாடுவது கிடையாது. இதை பதிவிறக்கம் செய்தவுடன் அலைபேசி திரையில் ஜிபிஎஸ் (GPS) மூலம் கணிக்கப்படும் உங்கள் சுற்றுப்புறத்தின் நிலப்பரப்பு 2டில் தோன்றும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்த போகிமான் மாஸ்டர் கதாபாத்திரம் நடக்கும். நிஜ உலகில், கையில் அலைபேசி திரையை நீங்கள் பார்த்துக் கொண்டே நடந்தால் அந்த கதாபாத்திரமும் திரையில் நடக்க ஆரம்பிக்கும். நடந்து கொண்டே சுற்றுப்புறத்தில் உள்ள போகிமான் இருக்கும் இடங்கள் சிறிய சதுர பெட்டிகளாக காண்பிக்கப்படும். அந்த இடத்துக்கு நடந்து / ஓடி சென்றால் அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் போகிமான் தோன்றும். அதை க்ளிக் செய்தால் உங்கள் அலைபேசி கேமராவும் இயங்க ஆரம்பிக்கும். கேமரா லென்ஸ் வழியாக அலைபேசி திரையில் பார்த்துக் கொண்டே, கேமராவில் தெரியும் உண்மைக் காட்சிகளோடு போகிமான் குட்டிச் சாத்தான்களை போகி பந்துகள் மூலம் வசமாக்க வேண்டும்.இவ்விளையாட்டு ஆபத்துகளையும் ஏற்படுத்தியது.
வியாழனில் இறங்கிய 'ஜூனோ'சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனை ஆராய்வதற்காக 2011 ஆக.5ல் நாசா அனுப்பிய ஜூனோ விண்கலம், 2011 ஜூலை 6ல் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இது இந்த கோளின் காலநிலை, புவிஈர்ப்பு, வாயுமண்டலம் குறித்த தகவல்களை அனுப்பும். சூரிய குடும்பத்தின் பெரியது வியாழன். இது புறக்கோள்கள் வகையை சேர்ந்தது. சூரியனில் இருந்து 5வதாக உள்ளது. 1,42,800 கி.மீ., பரப்பளவு கொண்டது. இதன் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு பெரியது. இதற்கு 28 துணை கோள்கள் உள்ளன. இது வாயுக்களால் நிரம்பி உள்ளது. வாயுக் களின் பிரதிபலிப்பால்தான், பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது. சூரியனில் இருந்து 77.85 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றிவர 11.9 ஆண்டுகள் ஆகிறது. தன்னைத் தானே 9 மணி 50 நிமிடங்களில் சுற்றி விடுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement