Advertisement

உலகம்

ஜனவரி
ஜன. 6: வடகொரியாவின் 'ஹைட்ரஜன் அணுகுண்டு' சோதனை வெற்றி.
ஜன. 17 : ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடை நீக்கம்.
ஜன. 20: பாகிஸ்தானில் பச்சா கான் பல்கலையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி.

பிப்ரவரி
* நியமனம் பிப். 11: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதராக, ஆஸ்திரேலிய இந்தியர் ஹரிந்தர் சித்து நியமனம்.
பிப். 12: புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் புதிய வகை டைட்டானிக் 2, 2018 முதல் இயங்கும் என அறிவிப்பு.
பிப். 22: மலேசியாவின் கோலாலம்பூர் போலீஸ் கமிஷனராக மலேசிய வாழ் இந்தியர் அமர் சிங் நியமனம்.
பிப். 23: பிஜி தீவில் ஏற்பட்ட சூறாவளிக்கு 29 பேர் பலி.
பிப். 24: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 23 பேர் பலி.
* பாகிஸ்தான் பார்லிமென்ட் முற்றிலும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பார்லிமென்ட் என்ற பெருமை பெற்றது.
* 'ஆறு' ஆஸ்கார் பிப். 28: 88வது ஆஸ்கார் விருது விழாவில் உலகின் சிறந்த படமாக 'ஸ்பாட் லைட்' தேர்வு. 'மேட் மேக்ஸ் பியூரி ரோடு' என்ற படம் 6 விருதுகளை குவித்தது. சிறந்த நடிகையாக பெரி லார்சன், சிறந்த நடிகராக லியோனார்டோ தேர்வு.

மார்ச்
மார்ச் 2 : உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், தொடர்ந்து முதலிடம்.
மார்ச் 3 : நியுயார்க் நகரில் உலகின் மிக செலவு மிகுந்த ரயில் நிலையம் திறக்கப்பட்டது.
மார்ச் 4: ஏமெனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதலில் 15 பேர் பலி.
* மலர்ந்தது மக்களாட்சி மார்ச் 15: மியான்மரில் 56 ஆண்டுகளுக்குப் பின் மக்களாட்சி மலர்ந்தது. இதற்காக பல ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகியின் கட்சி பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றது. மியான்மர் சட்டப்படி வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்கள் அதிபர் தேர்தலில் நிற்க முடியாது என்பதால், அவரது கட்சி சார்பில் கதின் கியாவ் என்பவரை நிறுத்தி அதிபராக்கினார்.
மார்ச் 19: ரஷ்யாவின் ரோஸ்டோவ் விமான நிலையத்தில் துபாய் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உட்பட 62 பேர் பலி.
மார்ச் 22: பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் பலி.
மார்ச் 26: பாகிஸ்தானின் லாகூரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 65 பேர் பலி.

ஏப்ரல்
ஏப். 7: வியட்நாம் புதிய பிரதமராக நிகுயென் சூவான் பதவியேற்பு.
ஏப். 16: ஜப்பானில் குமாம்டோ பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. 32 பேர் பலி.
* மிரட்டிய பூகம்பம் ஏப். 17: தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் 7.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 646 பேர் பலி. 12,500 பேர் காயம். 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 26 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்
ஏப். 25: விண்வெளியிலேயே லண்டன் மாரத்தானில் ஐரோப்பிய வீரர் டிம் பீக் பங்கேற்றார்.

மே
மே 7: அயர்லாந்து பிரதமராக எண்டா கென்னி மீண்டும் தேர்வு.
மே 20: தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்பு.
மே 27: ஜப்பான் ஹிரோஷிமா நகரில், அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.

ஜூன்
* நீளமான சுரங்க ரயில் பாதை ஜூன் 1: ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சுவிட்சர்லாந்து பகுதியில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்க ரயில்பாதை (57.09 கிமீ., தூரம்) பயன்பாட்டுக்கு வந்தது. இது உலகின் நீளமான மற்றும் ஆழமான சுரங்கபாதை என்ற பெருமை பெற்றுள்ளது.
ஜூன் 2 : பிரான்சில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்தது.
* நட்பு அணை ஜூன் 4: ஆப்கனில், இந்தியாவால் கட்டப்பட்ட 'சல்மா அணையை' பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கு 'ஆப்கன் - இந்தியா நட்பு அணை' என பெயர் வைக்கப்பட்டது. இந்த அணை கட்டும் பணி 1976ல் தொடங்கப்பட்டது. ஆனால், உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் போன்ற சவால்களை கடந்து கட்டி முடிக்கப்பட்டது.
ஜூன் 6: நில மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சகோதரர், பசில் ராஜபக்சே கைது.
ஜூன் 7: அமெரிக்க அழகியாக அந்நாட்டு ராணுவ அதிகாரி தேசவ்னா பார்பெர் தேர்வு.
ஜூன் 12: அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பலி.
ஜூன் 14: ஈராக் ராணுவம் நடத்திய சண்டையில், ஐ.எஸ்., தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொலை.
ஜூன் 27: துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில், ஐ.எஸ்., தற்கொலைப்படை தாக்குதலில் 41 பேர் பலி.

ஜூலை
வங்கத்தில் பயங்கரம் ஜூலை 1: வங்கதேச தலைநகர் தாகாவில் ஓட்டல் விடுதிக்குள் புகுந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில் இந்திய
மாணவி உள்பட 20 பேர் பலி. 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
ஜூலை 13: பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்பு.
ஜூலை 16: துருக்கி அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய 'ராணுவ புரட்சி' முறியடிப்பு.
* பிரான்சில் பயங்கரம் ஜூலை 16: பிரான்சின் நைஸ் நகரில் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஒருவன் கன்டெய்னர் லாரியை கூட்டத்தினர் மீது 2 கி.மீ., தூரம் இயக்கி , 84 பேரை கொன்றான்.
ஜூலை 23: ஜெர்மனியின் முனிச் நகரில் ஷாப்பிங் மாலில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி.

ஆகஸ்ட்
ஆக. 4: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா பொறுப்பேற்பு.
ஆக. 16: 'ஹேக்' செய்ய முடியாத குவாண்டம் தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியது.
ஆக. 22: தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மரணம்.

செப்டம்பர்
செப். 1: பிரேசில் அதிபர் தில்மா ரூசெல்ப் பதவி விலகினார். புதிய அதிபராக மிச்செல் டெமர் பதவியேற்பு.
செப். 3: சீனாவின் ஹேங்சு நகரில் ஜி-20 மாநாடு நடைபெற்றது.
* 'புனிதர்' தெரசா செப். 4: வாடிகனில் நடந்த விழாவில் அன்னை தெரசாவுக்கு, போப் பிரான்சிஸ், 'புனிதர்' பட்டம் வழங்கினார். இரண்டு அதிசயங்களை
அவர் நிறைவேற்றியதால் இவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டது.
செப். 28: 50 ஆண்டுகளுக்குப் பின் கியூபாவுக்கு அமெரிக்க தூதர் நியமனம்.

அக்டோபர்
அக். 3 : 2016 மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த யோஷினோரி ஓசுமி தேர்வு.
அக். 4 : இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டனின் டேவிட் தவுலாஸ், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ், டங்கன் ஹால்டேன் ஆகிய 3 பேர் தேர்வு.
அக். 5: வேதியிலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்சின் ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவின் பிரேசர் ஸ்டோடர்ட், நெதர்லாந்தின் பெனார்ட் பெரிங்கா தேர்வு.
* ஐ.நா., புதிய தலைவர் அக். 5: ஐ.நா., சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. பொதுச்செயலராக 10 ஆண்டுகளாக இருந்த பான் கி மூன் பதவிக்காலம் டிச. 31ல் முடியும். புதிய செயலராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டார்ஸ் தேர்வு.
அக். 8 : ஹைதி நாட்டில் ஏற்பட்ட மேத்தீவ் புயலால் 478 பேர் பலி.
அக். 10 : இங்கிலாந்தின் ஆலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்தின் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு.
* 'இசை'ந்த நோபல் அக்., 13: அமெரிக்க பாடகர் பாப் டைலன், 2016ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணத்தில் 1941ல் பிறந்தார். பாடகர், இசைக் கலைஞர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெகுஜன இசையில் புகழ் பெற்றவராக திகழ்கிறார்.
அக். 19: உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத கார் சேவை சிங்கப்பூரில் அறிமுகம்.
அக். 30: 'மிஸ் எர்த்' அழகியாக ஈகுவேடார் நாட்டின் கேத்ரின் எஸ்பின் தேர்வு.

நவம்பர்
நவ. 2: பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாடு இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் புறக்கணிப்பால் ஒத்திவைப்பு.
நவ. 3: கனடா செனட் சபைக்கு சரப்ஜித் சிங் என்ற சீக்கியர் தேர்வு.
நவ. 5: மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனையை நிறுத்தியது.
நவ. 25 : கியூபாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, 90, மரணம்.
நவ. 29: தாய்லாந்தின் புதிய மன்னராக அந்நாட்டு இளவரசர் மகா வஜிரலோங்கோர்ன் தேர்வு.

டிசம்பர்
டிச. 1: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் கார்கோ விண்கலம் வெடித்தது.
டிச. 5: இத்தாலி பிரதமர் மேட்டியோ ரென்சி பதவியை ராஜினாமா செய்தார்.
* உலக தலைவர் டிச. 6: அமெரிக்காவின் 'டைம்' இதழ் நடத்திய ஆன்லைன் கருத்துக்கணிப்பில் உலகின் சிறந்த தலைவராக பிரதமர் மோடி தேர்வு
டிச. 12: நியூசிலாந்து பிரதமராக பில் இங்கிலீஷ் பதவியேற்பு.
டிச. 21: மெக்சிகோவில் துல்டெப்க் நகரில் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 29 பேர் பலி.
டிச., 23: லிபிய விமானம் மால்டோ தீவுக்கு கடத்தல். பின் விடுவிப்பு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement