Advertisement

இந்தியா

ஜனவரிஜன. 2: பஞ்சாப் பதன்கோட்டில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி. 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.ஜன. 7: சகிப்புத்தன்மை பற்றி சர்ச்சையில் சிக்கிய நடிகர் அமிர்கான், 'இன்கிரிடபுள் இந்தியா' திட்டத்தின் துாதர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு. ஜன. 9 : உலக புத்தக கண்காட்சி டில்லியில் துவக்கம்.ஜன. 20: இந்தியாவுக்கென சொந்த ஜி.பி.எஸ்., அமைப்பதற்காக ஐந்தாவது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவியது.* ரகசியம் வெளியீடு ஜன. 23: சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த, நேதாஜியின் மறைவு தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடும்படி அவரது குடும்பத்தினர் உட்பட பலர் வலியுறுத்தினர். இந்நிலையில், அவர் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களின், 'டிஜிட்டல்' பிரதிகளை, பிரதமர் மோடி வெளியிட்டார்.* மீண்டும் அமித்ஷா: ஜன. 24: பா.ஜ., தேசிய தலைவராக அமித்ஷா இரண்டாவது முறையாக தேர்வு. இவர் மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். ஜன. 25 : இந்தியா - பிரான்ஸ் இடையே 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஒப்பந்தம் கையெழுத்து.* 112 பேருக்கு 'பத்ம' விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.ஜன. 26: இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பங்கேற்பு. பிரான்ஸ் ராணுவமும் அணிவகுப்பில் பங்கேற்பு. * அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்.
பிப்ரவரிபிப். 1: மகாராஷ்டிராவில் உள்ள முருத் பீச்சில் கல்லுாரி மாணவர்கள் 10 பேர் மூழ்கி பலி. பிப். 3: 'ஜிகா' வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. * வீர மரணம் பிப். 3: காஷ்மீரில் உள்ள உலகின் உயரமான சியாச்சின் பனிமலை, பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம். இதில், 6 நாட்களுக்குப் பின் ஹனுமந்தப்பா(உள்படம்) மரணம்.பிப். 12: தேசத்துரோக வழக்கில் டில்லி நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கண்ணைய்யா கைது. மார்ச் 2ல் ஜாமின் பெற்றார்.பிப். 15: நாட்டின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் மைசூரு முதலிடம். திருச்சி 3வது இடம்.பிப். 15 : ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஒரு மாதத்துக்கு ஒருவர் 6 முறை மட்டுமே பதிவு செய்ய முடியும். பிப். 18: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் தேசியக்கொடி பறப்பது கட்டாயமாக்கப் பட்டது. பிப். 18: இந்திய தனியார் நிறுவனத்தின் உலகின் மலிவான விலை (ரூ.251) 'ஸ்மார்ட்போனுக்கான' புக்கிங் தொடங்கியது. இது தோல்வியில் முடிந்தது. பிப். 19; அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு, காங்., கட்சியை சேர்ந்த கலிக்கோ புல் தலைமையிலான ஆட்சி பதவியேற்றது. பிப். 20: அரியானாவில் இடஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் போராட்டம். * ரயில்வே பட்ஜெட் ரத்து பிப். 25: ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் சுரேஷ் பிரபு லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதுவே கடைசி ரயில்வே பட்ஜெட். ஏனெனில் இனி ரயில்வேக்கு தனியாக பட்ஜெட் இல்லை எனவும், பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு அறிவித்தது. 1924 முதல் ரயில்வே பட்ஜெட் நடைமுறை இருந்தது.பிப். 28: வங்கிகள் வாரிய குழுவின் தலைவராக வினோத் ராய் பொறுப்பேற்பு.
மார்ச்* முதல் 'டிஜிட்டல்' மாநிலம் மார்ச் 1: அனைத்து துறைகளையும் இணைத்து 600க்கும் மேற்பட்ட செயலிகளை (ஆப்ஸ்) கேரள அரசு பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மார்ச் 2: கிங்பிஷர் நிறுவனர் மல்லையா வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் லண்டன் தப்பினார்.மார்ச் 10: ரியல் எஸ்டேட் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.மார்ச் 14: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி - 1 ஏவுகணை ஒடிசாவில் சோதனை.* பணமோசடி செய்ததாக மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் (தே.காங்.,) ஷகான் பூஜ்பால் கைது.மார்ச் 18: அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வாபஸ் பெற்றது.* 'விசாரணை'க்கு விருது மார்ச் 27: 63வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக அமிதாப், சிறந்த நடிகையாக கங்கனா ராவத் தேர்வு. சிறந்த படம், துணை நடிகர், எடிட்டிங் உள்ளிட்ட மூன்று விருதுகளை 'விசாரணை' தமிழ்படம் பெற்றது. மார்ச் 30: சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 7 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி.மார்ச் 31: கோல்கட்டாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலி.
ஏப்ரல் ஏப். 1 : புகையிலை பொருட்களின் அட்டைகளில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு. * முதல் பெண் முதல்வர் ஏப். 4: காஷ்மீரின் முதல்வராக இருந்த முப்தி முகமது சயித் மறைவைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முப்தி முதல் பெண் முதல்வராக பதவியேற்றார்.ஏப். 5: பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்.* 'செமி புல்லட்' ரயில் ஏப். 5: 'செமி புல்லட்' என அழைக்கப்படும் இந்தியாவின் மிக வேகமான காதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் டில்லி - ஆக்ரா இடையே இயக்கப்பட்டது. இது மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும்.ஏப்., 7: ஐ.ஐ.டி., கல்லுாரிகளுக்கான கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ. 90 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. * இந்தியாவில் இளவரசர் ஏப். 7: பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - இளவரசி கேட் மிடில்டன் தம்பதியினர் முதன்முறையாக இந்தியா வருகை தந்தனர். மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின் டில்லியில் உள்ள காந்தி சமாதி, தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.ஏப்., 8: மகாராஷ்டிராவில் உள்ள சனி பகவான் கோயிலில், பெண்கள் வழிபட இருந்த பல ஆண்டு தடை நீக்கம்.* கொல்லத்தில் கொடுமை ஏப். 10: கேரளாவின் கொல்லம் அருகே புத்திங்கல் கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீ பற்றியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 110 பக்தர்கள் பலி.ஏப். 15: இந்தியா - பிரான்ஸ் இடையே 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ராபெல் ஜெட் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து. ஏப். 18: சிக்கிம் மாநிலத்தில் உள்ள என்.ஐ.டி.,யில் 'பரம் கஞ்சன்ஜூங்கா' என்ற சூப்பர் கம்ப்யூட்டர் திறப்பு. ஏப். 20: உத்தரகண்ட்டில் பா.ஜ., போராட்டத்தில் தாக்கப்பட்ட சக்திமான் குதிரை உயிரிழந்தது. ஏப். 23: சுப்ரமணியன்சாமி, நரேந்திர ஜாதவ், சித்து, சுரேஷ் கோபி, ஸ்வாபன் தாஸ்குப்தா மற்றும் மேரி கோம் ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களாக தேர்வு. ஏப். 26: டில்லியில் உள்ள தேசிய மியூசியம், தீ விபத்தில் முழுவதும் சேதமடைந்தது. ஏப். 27: சொந்த ஜி.பி.எஸ்., வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
மேமே 3: விஜய் மல்லையா, ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். மே 11: உத்தரகண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்., கட்சி பெரும்பான்மை நிரூபித்தது. மே 19: கேரளாவில் மார்க்சிஸ்ட் - எல்.டி.எப். கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பு. மே 22: மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி.மே 23 : மறுபயன்பாட்டு விண்கல ஆய்வின் முதல்கட்டமாக ஆர்.எல்.வி.டி., (ரீயூசபிள் லாஞ்சிங் வெகிள் டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர்) வெற்றிகரமாக சோதனை.* அசாமில் தாமரை மே 24: அசாமில் 15 ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்தி, முதன்முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது. 126 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி 86ல் வெற்றி பெற்றது. அதில், பா.ஜ., மட்டும் 60 இடங்களை வென்றது. முதல்வராக சர்பானந்த சோனாவால் பதவியேற்றார். மே 25 : ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், கோவா மற்றும் காஷ்மீரில் ஐ.ஐ.டி., துவக்க மத்திய அரசு அனுமதி.* ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சீனா பயணம்.* மீண்டும் மம்தா மே 27: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட திரிணமுல் காங்., 294 இடங்களில் 211ஐ வென்று 2வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வரானார். காங்., 44, மார்க்சிஸ்ட் 26 இடத்திலும் வெற்றி பெற்றன.மே 31 : மகாராஷ்டிராவில் புல்கானில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அதிகாரிகள் உட்பட 16 வீரர்கள் பலி.* இந்திய கடற்படை தளபதியாக அட்மிரல் சுனில் லன்பா பொறுப்பேற்பு.
ஜூன் ஜூன் 3: மதுராவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 24 பேர் பலி. ஜூன் 8: பிரதமர் மோடி அமெரிக்க பார்லிமென்ட்டில் உரையாற்றினார். ஜூன் 11: ஏழு மாநிலங்களில் காலியாக இருந்த 27 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடந்தது. ஜூன் 15: புதிய விமான பயணக் கட்டணக் கொள்கை வகுக்கப்பட்டது. 1 மணி நேர பயணத்துக்கு 2500 ரூபாய் கட்டணமாக விதிப்பு.ஜூன் 18: விமானப்படையில் முதன்முறையாக 3 பெண்கள் பைலட்டாக பொறுப்பேற்பு.ஜூன் 27: ரிசர்வ் வங்கி துணை கவர்னராக விஸ்வநாதன் நியமனம்.
ஜூலைஜூலை 1: இந்தியாவில் தயாரான 'தேஜஸ்' விமானம், விமானப்படையில் சேர்ப்பு. ஜூலை 5: மத்திய அமைச்சரவையில் 19 பேர் புதிதாக சேர்ப்பு. ஜூலை 7: மொசாம்பிக், தென் ஆப்ரிக்கா, தான்சானியா, கென்யாவுக்கு பிரதமர் மோடி பயணம். ஜூலை 10: காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி, ராணுவத்தால் சுட்டுக்கொலை. அங்கு ஏற்பட்ட கலவரத்தில் 30 பேர் பலி. ஜூலை 12: ஞானபீட விருது(2015), குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சவுத்ரிக்கு, வழங்கப்பட்டது. ஜூலை 14: அடுத்த ஆண்டு உ.பி., சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்(காங்.,) நியமனம். ஜூலை 17 : அருணாசலப்பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு.ஜூலை 18: நவ்ஜோத் சிங் சித்து(பா.ஜ.,) ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். * மகத்தான 'மகசாசே' ஜூலை 27: பிலிப்பைன்சின் உயரிய ராமன் மகசாசே விருதுக்கு (2016) இந்தியாவைச் சேர்ந்த வில்சன் மற்றும் டி.எம்.கிருஷ்ணா தேர்வு. இதில், வில்சன் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையை எதிர்த்து போராடுபவர். டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசையை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.ஜூலை 30: திரிபுராவின் அகர்தலாவில் இருந்து டில்லிக்கு 'திரிபுரசுந்தர ரயில்' தொடக்கம்.
ஆகஸ்ட்இனி ஒரே வரி ஆக. 3: மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) மசோதா ஆக. 3ல் ராஜ்யசபாவிலும், ஆக. 8ல் லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. செப். 8ல் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். வரும் ஏப். ௧ முதல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது. ஆக. 7: ஆனந்தி பென் படேல் ராஜினாமாவை தொடர்ந்து, குஜராத் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு. ஆக., 8: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது.ஆக. 17: முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் கவர்னராக நியமனம். ஆக. 30: இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
செப்டம்பர் செப். 1 : ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கி வைத்தார். செப். 2: முதல் பிரிக்ஸ் திரைப்பட திருவிழா டில்லியில் நடந்தது.செப். 3: பிரதமர் மோடி வியட்நாம் பயணம்.* புதிய கவர்னர் செப். 4: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஓய்வை தொடர்ந்து, புதிய கவர்னராக துணை கவர்னர் உர்ஜித் படேல் நியமனம். செப். 8 : இன்சாட் - 3டிஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செப். 9: அசாமில் மூன்று நதிகளால் சூழப்பட்ட மஜூலு தீவு, இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக அறிவிப்பு. * பத்ம விருதுகளுக்கான நிபந்தனைகளில் மத்திய அரசு திருத்தம். செப். 14: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் - ஏர்செல் நிறுவனம் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து.செப். 16: அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு வெனிசுலாவில் நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி பங்கேற்றார்.* மர்மகோவா போர்க்கப்பல் செப். 17: மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஐ.என்.எஸ்., மர்மகோவா போர்க்கப்பல், நாட்டுக்கு அர்ப்பணிப்பு. இது ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் வல்லமை கொண்டது.செப். 18: காஷ்மீரின் உரி பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி. செப். 20: பராக் - 8 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை. செப். 21: பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முகவரி '7, ரேஸ் கோர்ஸ் ரோடு' என்பதற்கு பதிலாக, 'லோக் கல்யான் மார்க்' என மாற்றம். செப். 22: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்.* முதல் முறை செப். 26: பி.எஸ்.எல்.வி., - சி35 ராக்கெட் 'ஸ்காட்சாட் 1' உள்ளிட்ட 8 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது. இரண்டு மாறுபட்ட சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது இதுவே முதல் முறை.செப். 28: கார்பன் குறைப்பு செயல்பாட்டிற்காக டில்லி விமான நிலையத்துக்கு விருது. * 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' செப். 29: காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாக்., எல்லைப்பகுதிக்குள் 2 கி.மீ., தூரம் சென்று 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் அக். 15: வாரணாசியில் மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பேர் பலி.* இந்தியா - ரஷ்யா இடையே பாதுகாப்பு துறையில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.* 'பிரிக்ஸ்' மாநாடு: அக்.15: இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்துள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 8வது மாநாடு கோவா தலைநகர் பனாஜியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டன.அக். 17: ஒடிசாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி. அக். 18: அசோக் லைலான்ட் நிறுவனம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் பேருந்தை வடிவமைத்தது.* புதிய பயணம் மணிப்பூர் 'இரும்பு பெண்மணி' ஐரோம் ஷர்மிளா, அக். 18ல் அரசியல் கட்சி தொடங்கினார். மணிப்பூரில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஆக. 9ல் உண்ணாவிரதத்தை முடித்த இவர், அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளார். அக். 22 : இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைகழகம் குஜராத் வதோதராவில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. * இந்திய ஜனாதிபதியின் மாத வருமானத்தை 1.5 லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு. அக். 31: ம.பி.,யில் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொலை.
நவம்பர்சுகாதாரத்தின் வழிகாட்டி நவ. 3: மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் விளைவாக திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத முதல் மாநிலம் என்ற பெருமையை சிக்கிம் பெற்றது. இதில், ௨வதாக இமாச்சல், 3வதாக கேரளா இணைந்தன.நவ. 7: பிரிட்டன் பிரதமர் தெரசா மே முதல் முறையாக இந்தியா வந்தார்.* மகாத்மா காந்தி பேரன் கனு காந்தி மரணம்.* கறுப்பு ஒழிப்பு: கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவ. 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு சாமான்ய மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது. நாட்டின் வரி வருவாய் அதிகரித்தது.நவ. 10: பிரதமர் மோடி ஜப்பான் பயணம்.நவ. 18: கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, மகள் திருமணத்தை, 600 கோடி ரூபாய் செலவில் நடத்தினார்.ரயில் சோகம் நவ. 20: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து, பீகார் தலைநகர் பாட்னா சென்ற ரயில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டது. இதில் 124 பேர் பலி. 200 பேர் காயமடைந்தனர்.நவ. 21: சபரிமலை ஐயப்பன் கோயில் 'சபரிமலை தர்ம சாஸ்தா' என்பதற்கு பதில், ''சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்' என பெயர் மாற்றம்.நவ. 24: நாட்டின் முதல் 'பேமன்ட் வங்கியை' ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ஏர்டெல் நிறுவனம் துவங்கியது.* நீக்கம் அக். 24 : 'டாடா சன்ஸ்' தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம். இவருக்குப் பதிலாக தற்காலிக தலைவராக ரத்தன் டாடா நியமனம்.நவ. 29: காஷ்மீரில் நாக்ரொட்டா பகுதியில் பாக்., பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 7 வீரர்கள் பலி.
டிசம்பர்டிச. 1: உத்தரபிரதேசத்தின் ஆக்ரா - எடவாஹ் இடையே, ஆசியாவின் நீண்ட சைக்கிள் பாதை துவக்கம். டிச. 2 : சி.பி.ஐ., பொறுப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா நியமனம். டிச. 4 : டில்லியில் நடந்த 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் ஆப்கன், பாக்., இந்திய தலைவர்கள் பங்கேற்பு. டிச. 7: ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. டிச. 8: 2000 ரூபாய்க்கு மேல் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு பயன்படுத்தினால் சேவை வரி இல்லை.டிச. 9: முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி ஊழல் வழக்கில் கைது.டிச. 10: சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.டிச. 16: சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயருக்கு, கேரள நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.டிச. 17: நாட்டின் புதிய ராணுவ தளபதியாக பிபின் ராவத் தேர்வு. விமானப்படை புதிய தளபதியாக பி.எஸ்.தானோ தேர்வு.டிச. 18: மத்திய உளவு அமைப்பான 'ஐ.பி.,'க்கு ராஜிவ் ஜெயின், 'ரா' உளவு அமைப்பின் தலைவராக அனில் தஸ்மானா தேர்வு.டிச. 19: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு ஜெகதீஸ் சிங் கேஹர்வ் தேர்வு.டிச. 23: டில்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் ராஜினாமா. புதிய கவர்னராக அனில் பைஜால் தேர்வு.டிச., 28: ரிசர்வ் வங்கி துணை கவர்னராக ஆச்சார்யா நியமனம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement