Advertisement

தமிழகம்

ஜனவரி
ஜன. 15 : உச்சநீதிமன்ற தடையால் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
ஜன. 18: தனியார் கல்வி நிறுவனங்களிடம் ரூ.14.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக பி.எப். சென்னை, மண்டல ஆணையர் துர்கா பிரசாத் உட்பட 7 பேர் கைது.
ஜன. 19: பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க '1100' என்ற எண்ணுக்கு அழைக்கும் 'அம்மா கால் சென்டர்' வசதி துவக்கம்.
ஜன. 20: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது.
ஜன. 23: விழுப்புரம் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா(20), பிரியங்கா(21), சரண்யா(20), கிணற்றில் குதித்து தற்கொலை.
ஜன. 28: மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தமிழகத்தின் சென்னை, கோவைக்கு இடம்.
* அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழ. கருப்பையா ராஜினாமா.
ஜன. 30: சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சி என பெயர் மாற்றம்.

பிப்ரவரி
பிப். 6: வேலூர் அருகே தனியார் கல்லூரியில் எரிகல் விழுந்ததில் ஒருவர் பலி.
* மதுரை டி.கல்லுப்பட்டி அருகே பஸ் - லாரி மோதிய விபத்தில் 16 பேர் பலி.
பிப். 20: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.
பிப். 21: தே.மு.தி.க., (8), பா.ம.க.,(1), பு.த.(1) எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா. பின், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதனால் எதிர்க்கட்சி தலைவர்
பதவியை விஜயகாந்த் இழந்தார்.

மார்ச்
மார்ச் 13: உடுமலையில் கலப்பு திருமண ஜோடி சங்கர் - கவுசல்யா மீது தாக்குதல். இதில் சங்கர் பலி.
* மகாமகம் அமோகம்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழா(பிப். 13-22) நடந்தது. இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். 20 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
மார்ச் 21: பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்
மார்ச் 29: கின்னஸ் பாடகி: தமிழ் உட்பட இந்திய மொழிகளில் 40 ஆண்டுகளாக பாடி வருகிறார் பி.சுசிலா. இதுவரை 17,695 பாடல்களை பாடியுள்ளார். இதற்காக மார்ச் 29ல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
மார்ச் 31: வருணன்... ரமணன் : சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்த ரமணன் மார்ச் 31ல் ஓய்வு பெற்றார்.

ஏப்ரல்
ஏப். 3: சென்னை கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.
ஏப். 4: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றது.
ஏப். 29: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 9 பேரை செசன்ஸ் கோர்ட் விடுவித்தது.

மே
மே 14: திருப்பூரில் 3 கண்டெய்னர் களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மே 16: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.
மே 17: குறைந்த செலவில் கப்பல் சேவைக்காக தூத்துக்குடி துறைமுகம் மத்திய அரசின் 2 விருதுகளை பெற்றது.
மே 19: அ.தி.மு.க., சாதனை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 19ல் அறிவிக்கப்பட்டன. இதில் அ.தி.மு.க., 134 இடங்களை கைப்பற்றி 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி
அந்தஸ்தை பெற்றது. காங்., 8 இடங்களிலும், ஐ.யு. எம்.எல்., ஒரு இடத்திலும் வென்றது.
* புதுச்சேரியில் காங்., புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்., 15 இடங்களிலும், தி.மு.க., 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமியின் என்.ஆர்.காங்., கட்சி 8 இடங்களை
பெற்று தோல்வியைத் தழுவியது. அ.தி.மு.க., 4 இடங்களை பிடித்தது.
* முதல் ராணுவ வீரர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தின் 14 ராணுவ வீரர்கள் மே 19ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
படைத்தனர். இதில் சிவக்குமாரும் ஒருவர். இவரே இச்சாதனையை எட்டிய முதல் தமிழக வீரர்.
மே 22: புதுச்சேரி கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி நியமனம்.
மே 23: தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதா பதவியேற்பு. 100 யூனிட் மின்சாரம் இலவசம், 500 டாஸ்மாக் கடைகள் நீக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்து.
மே 25: திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., சீனிவேல் மரணம்.

ஜூன்
ஜூன் 4: கோயில் சிலைகளை பதுக்கிய வழக்கில் தீனதயாளன், சென்னையில் சரண்.
ஜூன் 6: புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்பு.
ஜூன் 9: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக ராம மோகன ராவ் நியமனம்.
ஜூன் 14: டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஜூன் 16: தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமியின் 'பால் சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு எழுத்தாளர் குழ.கதிரேசனும், 'யுவ புரஸ்கார்' விருதுக்கு லட்சுமி சரவணக்குமாரும் தேர்வு.
ஜூன் 24: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென்பொறியாளர் சுவாதி வெட்டிக்கொலை. இது தொடர்பாக ராம்குமார் கைது.
ஜூன் 30 : ராஜ்யசபா எம்.பி.,யாக அ.தி.மு.க.,வின் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ர மணியம், விஜயகுமார் மற்றும் தி.மு.க., வின் பாரதி, இளங்கோவன் தேர்வு.

ஜூலை
ஜூலை 5: சென்னைக்கு பெருமை: ஜூலை 5: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நாட்டின் பழமையான நீதிமன்றம். இது 1862ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீண்ட கோரிக்கைக்கு பின் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜூலை 15: சென்னையில் மத்திய மின்துறை அமைச்சர் பியுஸ் கோயல்- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு.
ஜூலை 22: சென்னையிலிருந்து 29 வீரர்களுடன் அந்தமான் சென்ற ஏ.என்.32 விமானம், நடுவானில் மாயம். இதில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். விமானத்தை கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜூலை 24: இந்தியாவின் முதல் பசுமை ரயில் பாதையாக ராமேஸ்வரம் - மானாமதுரை மாற்றம்.
ஜூலை 27: ராமேஸ்வரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வெண்கல சிலையை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
ஜூலை 30: 'பளார்' சர்ச்சை: டில்லி விமான நிலையத்தில், அ.தி.மு.க., எம்.பி., சசிகலா புஷ்பா, தி.மு.க., எம்.பி., திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இதனால் சசிகலா புஷ்பா அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆகஸ்ட்
ஆக. 3: இயக்குநர் ஏ.எல்.விஜய், மனைவி அமலாபாலை பிரிவதாக அறிவித்தார்.
ஆக. 9: சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் ரிசர்வ் வங்கியின் ரூ. 5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடும் பணி தொடர்கிறது.
* நடிகை ஜோதிலட்சுமி மரணம்.
* அர்ப்பணிப்பு: ஆக. 10: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 1000 மெகாவாட் அணு மின் உலையின் முதல் அலகு, முறைப்படி நாட்டுக்கு
அர்ப்பணிக்கப்பட்டது. 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்த நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியுடன், முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்றார். 560 மெகாவாட் மின்சாரம், தமிழகத்திற்கு கிடைக்கும்.
ஆக. 15: 2016ம் ஆண்டுக்கான அப்துல்கலாம் விருது, அறிவியலாளர் சண்முகத்துக்கு வழங்கப்பட்டது.
ஆக. 16: சட்டசபையில் பங்கேற்பதில் இருந்து ஸ்டாலின் உட்பட 80 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒருவாரம் தற்காலிக நீக்கம்.
ஆக. 22 'செவாலியே' கமல்: பல்வேறு துறைகளில், சிறந்து விளங்குபவர்களை பெருமைப்படுத்தும் வகையில், பிரான்ஸ் அரசு, 1957 முதல், செவாலியே விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆக. 27: மெடிக்கல் சீட் தருவதாக கூறி, மாணவர்களிடம் 72 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம்., நிறுவனர் பச்சமுத்து கைது. செப். 17ல் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார்.
ஆக. 28: ஐ.நா., சபையின் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான துாதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமனம்.
ஆக. 31: பொறுப்பு கவர்னர்: தமிழக கவர்னரான ரோசையா பதவி முடிந்தது. மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக புதிய பொறுப்பு கவர்னராக நியமனம்.

செப்டம்பர்
செப்., 13: இது நியாயமா: காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஏற்காமல் தமிழர்கள் மீதான தாக்குதலை சில கன்னடர்கள் மேற்கொண்டனர். தனியார் நிறுவன 42 பஸ்கள் எரிப்பு.
செப். 14: தமிழக காங்., கட்சி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்.
செப். 15: காவிரிப் பிரச்னை போராட்டத்தில் ஈடுபட்ட விக்னேஷ் தீக்குளிப்பு.
செப். 19: சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் தற்கொலை.
செப். 21: சின்னமலை - மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயிலை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.
செப். 22: தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
செப். 23: கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் வெட்டிக் கொலை.
செப். 28: உலகின் பெரிய சோலார்: உலகின் பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திறக்கப்பட்டது. குஜராத்தை சேர்ந்த அதானி நிறுவனம் அமைத்தது. 4,550 கோடி ரூபாய் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் 648 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் சேர்க்கப்படும்.

அக்டோபர்
அக். 2: இசைக்கு கவுரவம்: மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் விதமாக நினைவு சிறப்பு தபால் தலையை ஐ.நா., சபை வெளியிட்டது.
அக். 4: உள்ளாட்சி தேர்தலை (அக்., 17, 19) சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அக். 5: செங்கல்பட்டில் நாட்டின் முதல் மருத்துவ பூங்கா (மெடி பார்க்) அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
அக். 6: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பு.
அக். 20: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி.
அக். 25: காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.
அக். 31: மத்திய அரசு வெளியிட்ட தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு 18வது இடம்.

நவம்பர்
நவ. 1: நடிகர் கமலுடன் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த கவுதமி, பிரிவதாக அறிவித்தார்.
நவ. 7: தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 6ல் இருந்து 9 மாதமாக அதிகரிப்பு.
நவ. 9: ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
நவ. 11: வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில், சி.யு.பி., வங்கி 'ரோபோ' சேவையை தி.நகர் கிளையில் துவக்கியது.
நவ. 14: அ.தி.மு.க., அமைப்பு செயலர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மரணம்.
நவ. 19: புதுச்சேரியில் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் முதல்வர் நாரயணசாமி வெற்றி.
* மூன்றிலும் 'இலை': நவ. 19ல் நடந்த தேர்தலில் தஞ்சையில் ரெங்கசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் என மூன்றிலும் அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றது. இதனால் அ.தி.மு.க.,வின் பலம் 136 ஆனது.
நவ. 21: பண மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன், திருப்பூரில் கைது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.
நவ.28: சிக்கிய பயங்கரவாதிகள்: ஆறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல் குவைதா அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகளை, தேசிய புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர். 3 பேர் மதுரையிலும், ஒருவர் சென்னையிலும் கைது.

டிசம்பர்
டிச. 2: வங்கக்கடலில் உருவான 'நடா' புயல் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.
டிச. 5 மூன்றாவது முறை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா செப்., 22ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்குப் பின் டிச. 5ம் தேதி இரவு 11:30 மணிக்கு மரணமடைந்தார். புதிய முதல்வராக மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
டிச. 7: தி.மு.க., தலைவர் கருணாநிதி 4 நாள் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
டிச. 14: கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதி.
டிச. 15: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.
* தி.மு.க. தலைவர் கருணாநிதி மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி. டிச. 23ல் வீடு திரும்பினார்.
டிச. 19: உத்தர கண்டின் ஹரித் துவாரில் திருவள்ளுவர் சிலையை அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் திறந்து வைத்தார்.
டிச. 21: தமிழக அரசு தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
* தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்தது இதுவே முதல்முறை. ராவ், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
* வருமான வரி சோதனையில் சேகர் ரெட்டி, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கைது.
டிச. 22: டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
* அனுபவ அதிகாரி: டிச. 22 புதிய தலைமைச் செயலராக தமிழகத்தின் கிரிஜா வைத்தியநாதன் நியமனம். 1981ல் தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக
தேர்ச்சி பெற்றவர்.
டிச. 27: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகல்.
டிச. 28: வர்தா புயல் பாதிப்பை மத்திய குழு பார்வையிட்டது.
டிச. 29: அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா தேர்வு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement