Advertisement

பிராங்கி (ஹிந்தி)

நடிகர்கள் : கபில் சர்மா, இஷிதா தத்தா
இயக்கம் : ராஜீவ் திங்ரா
தயாரிப்பு : கபில் சர்மா

காமெடி நடிகர் கபில் சர்மா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி உள்ள இரண்டாவது படம் "பிராங்கி". பிரிட்டீஷ் இந்தியா காலத்தில் நடக்கும் கதையுடன், காதல், நகைச்சுவை, சென்ட்டிமென்ட் என கலந்து வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...

கதை பிரிட்டீஷ் இந்தியா காலக்கட்டத்தில் நடக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெக்ராம்பூர் என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் மங்கா எனும் கபில் சர்மா. இவருக்கு, அருகில் உள்ள இன்னொரு ஊரை சேர்ந்த சராகி எனும் இஷிதா தத்தா மீது காதல். சராகியை திருமணம் செய்ய விரும்புகிறார் கபில். ஆனால் கபில், ஆங்கிலேயர்களிடம் வேலை பார்ப்பதால் சராகியின் தாத்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இதுஒருபுறம் இருக்க, தன் காதலியின் ஊரில், ஒரு பெரிய சாராய தொழிற்சாலை அமைக்க பிரிட்டீஷ் அரசாங்கம் முடிவு செய்கிறது. இதை அந்த ஊர் மக்கள் எதிர்க்கிறார்கள், ஊரை விட்டு வெளியேறும் சூழலும் உருவாகிறது. தன் காதலியை ஊரையும், தன் காதலையும் காப்பாற்ற, சாராய ஆலையை வராமல் தடுக்க பிரிட்டீஷ் அரசாங்கத்தை கபில் எதிர்த்தாரா... அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா... என்பது பிராங்கி படத்தின் மீதிக்கதை.

காமெடி படத்தில் நடித்த கபிலுக்கு இந்த இரண்டாம் படம் கொஞ்சம் சிரீயஸ் கதை. அதனால் நடிப்பில் ரொம்பவே திணறியிருக்கிறார் மனிதர். காமெடி காட்சிகளில் இயல்பாக நடித்தாலும், காதல், சென்ட்டிமென்ட் காட்சிகள் அவருக்கு செட்டாகவில்லை.

இஷிதா சர்மா நடிப்பு இயல்பாகவும், அருமையாகவும், அழகாகவும் உள்ளது.

படத்தின் பிளஸ் பாயின்ட்டே நவ்னீத் மிஸரின் ஒளிப்பதிவு மற்றும் ஜதிந்தர் சிங்கின் இசையும் தான். அந்தக்காலகட்டத்திற்கு ஏற்றபடி ஒளிப்பதிவும், இசையும் அருமையாக அமைந்துள்ளது.

ராஜீவ் திங்கரா, பிராங்கி படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை ஒட்டுமொத்தமாக பார்த்தால் நன்றாக தெரிகிறது. ஆனால் திரைக்கதை வலுவாக இல்லாததால் படம் மெதுவாக நகருகிறது. மேலும் படத்தின் நீளமும் ரசிகனை ரொம்பவே வெறுக்க செய்கிறது.

காதல், நகைச்சுவை, குடும்ப சென்ட்டிமென்ட் என அனைத்து அம்சங்கள் இருந்தும், வலுவான திரைக்கதை இல்லாதது பிராங்கி படத்தின் பெரிய மைனஸ். கபில் சர்மாவின் ரசிகர்கள் பிராங்கியை பார்க்கலாம்... மற்றவர்கள்.?

மொத்தத்தில் "பிராங்கி - ரசிகன் கொட்டாவி"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement