Advertisement

ஸ்பைடர்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் நேரடி படம் ஸ்பைடர். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் பல நுணுக்கமான தகவல் சேகரிப்பு பின்னணியில் கதை புனையப்பட்டுள்ளது.

படத்தோட ஒன் லைன் முதலில் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும், என்னவென்றால், சாவை பார்த்து சந்தோஷப்படும் வில்லனிடம் இருந்து, அவன் பழி வாங்க துடிக்கும் அப்பாவி மக்களை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற மனித தன்மையை முருகதாஸ் பேசிருக்கும் படம் தான் ஸ்பைடர். இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்றே சொல்லலாம்

படத்தின் கதைப்படி மகேஷ் பாபு பொதுமக்களின் தொலைபேசி தகவல் வழி வேலையை பார்த்து வருகிறார் ,டைம் பாஸ் ஆக மக்களின் செல் போன் பேச்சுக்களை ஒட்டு கேட்க தொடங்குகிறார் ,அப்படி அவர் ஒட்டு கேட்கும் போது பொதுமக்கள் மாட்டிக்கொள்ளும் காதல் முதல் கட்ட பஞ்சாயத்து வரை அத்தனை பிரச்சனைகளையும் அசால்ட்டாக கையில் எடுத்து களை எடுக்கிறார். இப்படி ஒட்டு கேட்டு தான் ஹீரோயின் கூட மாட்டுகிறார்.

ஒவ்வொரு பிரச்சனைகளயும் கையில் எடுக்கும் மகேஷ் பாபு, ஒரு நாள் ஒரு மாணவிக்கு ஒரு பிரச்னை வருகிறது. இதில் இருந்து அந்த மாணவியை காப்பாற்ற தன் தோழியான போலிசை அங்கு அனுப்புகிறார். அந்த இடத்தில் மாணவியும் போலீசும் கொல்லப் பட, தான் அனுப்பி வைத்த காவல் துறை பெண் கொடூரமாக இறந்து போகும் பின்னணியை கண்டுபிடிக்க துடிக்கிறார் ஹீரோ.

பலவித தேடல்களுக்கு பிறகு பரத் தான் அந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார். பரத்தை சும்மா படத்தில் வர வைக்க முடியாது என்று ஐதராபாத்தில் இருக்கும் வொண்டர் லா தீம் பார்க்கில் ஒரு சண்டை காட்சி வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் அது ரொம்ப மிரட்டலாக இருக்கிறது. இவ்வளவு சண்டை போட்டும் பரத்துக்கு பின் அவர் அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் ஹீரோ அறிகிறார். இறுதியாக அண்ணன் தம்பி இருவரையும் எப்படி ஹீரோ தண்டனை தருகிறார் மக்களை மீட்டார் என்பதே மீதி கதை.

பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு படத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து சண்டை போட்டாலும் பாவம் அவர் முகம் மட்டும் அப்பாவியாக தெரிகிறார். எல்லா சீனிலும் குழந்தை தனமாகவே தெரிகிறார். மொத்த கதையை சுமந்தாலும் தமிழுக்கு ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.

கதாநாயகி ரகுல் ப்ரீத் ஓவராக நடிப்பது போல தெரிகிறது. இவர் பெரிதாக படத்துக்கு பலம் இல்லை, பாடலுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

இயக்குனர் எஸ்ஜே.சூர்யா சிறு வயது நடிகர் மற்ற நடிகர்களை விட சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது முக பாவனைகள் அழகு, படத்தில் வெட்டியான் குடும்பத்தில் பிறந்து சாவின் சத்தத்தையும், அழுகுரலையும் கேட்டு பழக்கப்பட்ட வில்லன் எஸ்ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டுகிறார்.

துப்பறியும் ஒரு சின்ன கதையை எடுத்துக்கொண்டு, சில அறிவியல் நுட்பத்தோடு கதையை சொல்ல முற்பட்டாலும், படத்தில் பல இடங்களில் கொட்டாவி வருகிறது. அங்கங்கே தொய்வுகள், சண்டையை கூட இழு இழு வென இழுத்திருக்கிறார். பல காட்சிகளில் லாஜிக் இல்லை, ஒரு சாதாரண மனிதன் மக்களின் அத்தனை ரகசியங்களையும் எடுத்து, இவரே எல்லாம் செய்ய காவல் துறை அனுமதிக்குமா என்று யோசித்தால் இது சினிமா என்று தான் சொல்ல தோனுகிறது.

ஆர்.ஜே பாலாஜி பெரிதாக ஒன்றும் படத்தில் பேசவில்லை என்பது ஒரு மைனஸ்.

படத்தின் நிறைவாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் மட்டுமே மனிதம் இருப்பதாக உணர்கிறோம். மற்றபடி இன்றைய வாழ்க்கையில் மக்கள் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள், இணையதளம் என்று நேரத்தை வீணாகுகின்றனர். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது என்ற கருத்தை சொல்ல வருகிறார் என்று புரிகிறது. என்ன ஒன்று படம் முடிந்து வெளில வரும்போது இது முருகதாஸ் படம் தானா என்ற சந்தேகம் வராமல் இல்லை.

சந்தோஷ் சிவன் ஒளிபதிவு பலம், ஹரிஷ் இசை வழக்கம் போல ஸ்டைலீஷ். இயக்குனர் காஸ்ட்யூம்ல செலுத்தின கவனத்தை, கதையில் கொஞ்சம் செலுத்தி இருக்கலாம் போல, அந்த அளவு படு வீக் கதை.

மொத்தத்தில், "ஸ்பைடர்... கதை இன்றி அறுந்து தொங்கும் வலை...!"

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • Shankar Ganesh - Kumbakonam,இந்தியா

    இந்த திரைப்படம் சரியான உழைப்பு இல்லை. லேசா ஜிமிக்கி வேலை செய்து மக்களிடம் பணம் வசூல் செய்துவிட்டார்கள். மகேஷ் பாபுவின் மிக மோசமான திரைப்படம் இது. தன்னை உருவாக்கிய குருவிற்கு படம் பண்ணியுள்ளார் முருகதாஸ் என்றுதான் சொல்லவேண்டும்.

  • samy - chennai,இந்தியா

    1. ஒரு பட்டிக்காட்டு மற்றும் சாதாரண எதிர்மறை-எண்ணம் கொண்ட தமிழ்மக்களின் (பிற மாநிலத்தவரும் சேர்த்து) 'வெளிப்பாடா'கவும் இருக்கிறது SJ சூர்யா'வின் 'கதாபாத்திரம்'. அதை முதலில் நாம் 'பெரிய மனதுடன்' ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் 2. மேலும் ஒரு 'நல்ல' கதையம்சம் உள்ள & 'கிராமத்தானின்' வலியுள்ள மனதினை படம் போட்டு காட்டும் ஒரு 'சைக்கோ-திரில்லர்'ஆகவும் இருக்கிறது இத்திரைப்படம். 3. இவ்வாறான "மன-நோய்" சம்பத்தப்பட்ட கதைகள் "தமிழ் கூறும் நல்லுலகுக்கு' நிறைய வர வேண்டும். அதற்க்காக திரு.A.R.முருகதாஸ் அவர்களுக்கு என் வணக்கங்கள்.,சார். 4. முக்கியமாக.. கதையின் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் 'சூப்பர்'.. வேறு எந்த தமிழ்-நடிகர் நடித்திருந்தாலும் ஓவர்'ரா 'பன்ச்' பேசி,ஸீன் போட்டு, குத்து டான்ஸ் ஆடி சொதப்பி இருப்பார்கள். மகேஷ் டீசென்ட் கிளாஸ் ஆக்ட்டிங்கில் 'ஸ்கோர்' பண்ணி விடுகிறார். 5. ஹீரோ & ஹீரோயின் 'காதல்' காட்சிகளை அதிகமாக இன்னும் சேர்த்திருக்கிலாம். செம-ரொமான்ஸ் ஸீன் & டயலாக்ஸ். 6. பாடல்கள் சூப்பர். 7. எ ஒர்த் வாட்சப்பிள் மூவி... DON'T MISS IT.

  • கருப்பன் -

    போடா"லூசு

  • MohaideenMohamedRazeen -

    நான் பெரிய டைரக்டரா?நீ பெரிய டைரக்டரா என்கிற போட்டியில பிரம்மாண்டத்துக்கு படம் எடுத்துவிட்டு கதையில் கோட்டை விட்டுட்டிங்களே சார்??செலவழிச்ச பணத்துல க்ராபிக்ஸ்க்கு கொஞ்சும் கூட ஒதுக்கிருக்கலாமே சார்?? றசின்-இலங்கை.

  • MohaideenMohamedRazeen -

    சிறு வயது சூர்யாவின் முடியையும் எக்ஸ்பிரஸனையும் பார்த்ததுயும்,ட்ரைலர்ல எஸ் ஜே சூர்யாவ பார்த்ததையும் வச்சு மெயின் வில்லன் எஸ் ஜே சூர்யாதான் கணித்துக்கொள்ளலாம்.அப்பறம் எதுக்கு பரத் என்கின்ற ஒருத்தரை வைத்து சஸ்பென்ஸ்ன்ட பெயர்ல வீணாக்குனிங்க??ஆக குறைந்தது ட்ரைலர்ல சூர்யாவை காட்டாமல் விட்டிருந்தால் கூட யாரு வில்லன் என்று சஸ்பென்ஸ்ஸோட பாத்திருக்கலாம்.இது கூட டைரக்டருக்கு தெரியாதா?தமிழ் ரசிகர்களுக்கு படம் எடுக்குறயா?தெலுங்கு ரசிகர்களுக்கு படம் எடுக்குறயானு முருகதாஸ் குழம்பிட்டாரு.ஒரு கல் இப்டி உருண்டு வருமா?இதெல்லாம் ஓவர் இல்ல..வேண்டு மென்றே திணிக்கப்பட்ட பாடல்கள் படத்துக்கு கூடுதல் போரை தருகிறது.அந்தக்குடும்பத்த கடத்தி வைத்திருக்கும்போது,பெண்கள் காப்பாத்துறத பாத்து தியெட்டர்ல சிரிச்சப்போ இது காமெடி பில்மா இல்ல த்ரில்லரானு எனக்கு பலத்த சந்தேகம்..

  • Rameshkumar Arumugam - bangalore,இந்தியா

    ஏன் தினமலர் இவ்ளோ கேவலமா ஆயிட்டு வருது. its look like some party or some actor news paper. ஏன் இவ்ளோ பாரபட்சம் பாக்குறீங்க. கேவலமான விவேகம் படத்துக்கு படம் அருமைனு review கொடுத்துட்டு, மத்த ஓரளவுக்கு இருக்குற படத்தை இப்டி காரி துப்புறிங்க. ப்ளீஸ் whoever ஆசிரியர் verify content properly and give approval.

  • M GOWTHAMAN - chennai,இந்தியா

    A R முருகதாஸ் சறுக்கின முதல்படம். பாவம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement