Advertisement

பேவாட்ச்

தீபிகா படுகோனேயை தொடர்ந்து மற்றுமொரு பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் நடித்த முதல் படம் என்ற பெருமையோடு, இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் படம் தான் "பேவாட்ச்".

வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு பொழுதுபோக்கிற்கான முக்கியமான இடம் கடற்ரை. கடற்கரையில் மக்கள் சன் பாத் உள்ளிட்ட குளியல் உடன் பொழுதை கழிப்பீர். அப்படியொரு ஒரு கடற்கரையில் ஆபத்து காலத்தில் பாதுகாக்கும் வீரர்களாக பணியாற்றுபவர்கள் மிட் எனும் WWE புகழ் ராக் அலைஸ் டுவைன் ஜான்சன் மற்றும் அவரது குழுவினர். ஒருநாள் கடற்கரையோரத்தில் போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறார் டுவைன். இது எங்கிருந்து வந்தது என்று புலன் விசாரணை செய்கிறார். அப்படி அவர் மேற்கொண்ட புலனாய்வில், விக்டோரியா எனும் பிரியங்கா சோப்ரா தலைமையிலான போதை கும்பல் தான் இதையெல்லாம் செய்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார். அப்படி கண்டுபிடித்த டுவைன் பிரியங்கா உள்ளிட்ட போதை கும்பல்களை என்ன செய்தார், அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தினாரா...? என்பது கொஞ்சம் காமெடியும், நிறைய பிகினி காட்சிகள் நிறைந்த பேவாட்ச் படத்தின் மீதிக்கதை.

படத்தின் மொத்தத்தையும் டுவைன் ஜான்சன் தனியாளாக தோளில் தாங்கியுள்ளார். வழக்கம்போல் அஜானுபாகுவான தனது உடல் தேகத்தை காண்பித்தும், நடிப்பிலும் ரசிகர்களை கவருகிறார்.

பிரியங்காவிற்கு படத்திற்கு பெரிய ரோல் தான், ஆனால் படத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக தான் காண்பிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படம் என்பதாலோ கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார் பிரியங்கா. ஆனால் அவருக்கு நெகட்டீவ் கொஞ்சம் கூட செட்டாகவில்லை.

டுவைன், பிரியங்கா தவிர ஜாக் எப்ரான், அலெக்ஸாண்ட்ரா, டேவிட், கெல்லி என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் டுவைனும், பிரியங்காவும் தான் படத்தில பளிச்சிட்டிருக்கின்றனர்.

பேவாட்ச் படத்தை செத் கார்டன் இயக்கியுள்ளார். இயக்குநராக தன் ரோலை சரியாக செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. அதேசமயம் படத்தில் இருக்கும் காமெடி ஆங்காங்கே ரசிகர்களை கொஞ்சம் சரிக்க வைக்கிறது. கடற்கரை பின்னணியை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசையும், பின்னணி இசையும் இதம் சேர்க்கின்றன. ஆனாலும், பலவீனமான கதையும், அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே அறியும் பலவீனமான திரைக்கதையும் படத்திற்கு பெரிய மைனஸாக இருக்கிறது.

மொத்தத்தில், "பேவாட்ச் - பெட்டர், டோன்ட்வாட்ச்"

ரேட்டிங் - 2/5

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement