Advertisement

விஸ்வரூபம் II

நடிப்பு - கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் மற்றும் பலர்
இயக்கம் - கமல்ஹாசன்
இசை - முகம்மது ஜிப்ரான்
தயாரிப்பு - ஆஸ்கர் பிலிம்ஸ்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் பல இரண்டாம் பாகத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படி ஒரு இரண்டாம் பாகத் திரைப்படத்தைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான்.

இரண்டாம் பாகம் படம் என்றாலே முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் இல்லாமலும் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு புதுக் கதையாகவாவது இருக்கும். இந்த இரண்டாம் பாகப் புதுக் கதையில் படத்தின் இயக்குனர் கமல்ஹாசன் புதுக் கதையைத்தான் எழுதவில்லை, குறைந்த பட்சம் புதிய காட்சிகள் சிலவற்றையாவது எடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

முதல் பாகத்தில் எடுத்து மீதமாகிப் போய், படத்தில் சேர்க்க முடியாமல் விடுபட்டுப் போன அல்லது நீக்கப்பட்ட காட்சிகளை வைத்து, ஒரு குலுக்குக் குலுக்கி இந்த விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

சினிமா மீது அதி தீவிரக் காதல் கொண்டுள்ள கமல்ஹாசன் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. அதற்கு கமல்ஹாசன் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

முதல் பாகத்தில் தப்பித்துப் போன தீவிரவாதிகளான உமர், சலீம் ஆகியோரை இந்திய உளவுப் பிரிவான ரா அதிகாரி கமல்ஹாசன் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

கமல்ஹாசன் அவரது மனைவி பூஜா குமார், உடன் பணிபுரியும் ஆன்ட்ரியா, மேலகதிகாரி ஆகியோர் லண்டன் செல்கிறார்கள். அங்கு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். தீவிரவாதிகளுக்குத் துணையாக இருக்கும் அரசு அதிகாரியைப் பிடிக்கிறார்கள். இடையில் தீவிரவாதக் குழுவில் இருக்கும் கமல்ஹாசன் உளவுப் பணி செய்த காட்சிகள் வருகிறது. கமல்ஹாசனை மய்யமாக வைத்து பூஜாவை நன்றாக வெறுப்பேற்றுகிறார் ஆன்ட்ரியா. மூழ்கிப் போன ஒரு கப்பலிலிருந்து 1500 டன் வெடி பொருட்களை பூஜா குமார் உதவியால் கண்டுபிடிக்கிறார்கள். பின்னர் டில்லி வருகிறார்கள். ஆன்ட்ரியா, பூஜா கடத்தப்படுகிறார்கள். இப்படி எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. கடைசியில் தீவிரவாதத்திற்கு எதிராக சில வசனங்களை கமல்ஹாசன் பேசுவதுடன் படம் இனிதே நிறைவடைகிறது. இன்னும் பயன்படுத்தாத சில காட்சிகள் இருக்கிறது என விஸ்வரூபம் மூன்றாம் பாகத்திற்குப் பிளான் செய்து விடாதீர்கள்.

கமல்ஹாசன் வழக்கம் போல நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஆவேசமாகச் சண்டையிடுகிறார். சாதி மறுப்பு பேசுகிறார், அரசாங்கத்தைத் திட்டி நாலு வசனம் பேசுகிறார். ஆனால், முகத்தில் அடிபட்டு இரண்டு பிளாஸ்டர்கள் போடப்பட்டுள்ள நிலையில் எப்படி சுத்தமாக ஷேவ் செய்திருப்பார் என்ற சந்தேகம் வருகிறது. அந்த பிளாஸ்டர் பல நாட்கள் மாற்றப்படாமல் அப்படியே வேறு இருக்கிறது.

ஆன்ட்ரியா சில காட்சிகளில் நடிப்பில் கமல்ஹாசனையும் ஓவர்டேக் செய்கிறார். கூடவே ஒரு பெண் இருந்து அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்று சொன்னால் எந்தப் பெண்ணும் ஈஸியாகச் செய்து விடுவார்கள். அதிலும் சினிமா என்றால் சொல்லவா வேண்டும், ஆன்ட்ரியா நடிப்பிலும், சண்டையிலும் அசத்துகிறார். ஆக்ஷ்ன் ஹீரோயின் தேடுபவர்கள் இனி ஆன்ட்ரியாவைத் தாராளமாக ஒப்பந்தம் செய்யலாம்.

பூஜா குமார், பார்ப்பதற்கு ஐயோ பாவமாக இருக்கிறார். கமல்ஹாசன், ஆன்ட்ரியாக இருவருக்கும் இடையில் இருப்பது பணி நிமித்தமான உறவா அல்லது வேறு ஏதாவதா என்று குழம்பிப் போகிறார்.

வில்லனாக ராகுல் போஸ், அதே கரகர பின்னணிக் குரலில் அந்தப் பெரிய கண்களால் தீவிரவாதத்தின் தீவிரத்தைக் காட்டுகிறார். கமல்ஹாசனின் உயர் அதிகாரியாக சேகர் கபூர். கமல்ஹாசன், அம்மாவாக வகிதா ரகுமான், அவரை வயதான பாட்டியாகப் பார்க்கவும் ஒரு தைரியம் வேண்டும். கமல்ஹாசனைப் பிடிக்காத அரசு அதிகாரியாக அனந்த் மகாதேவன், அந்த வெறுப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

முகம்மது ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே. முதல் பாகத்தில் ஹிட்டான உன்னைக் காணாத... பாடல் போன்று ஒரு பாடலை வைத்திருக்கலாம்.

ஆக்ஷன் காட்சிகள், ஒளிப்பதிவு ஆகியவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், தடுமாற்றமான திரைக்கதையில் அவர்கள் உழைப்பும் வீண்.

இந்த இரண்டரை மணி நேரப் படம் கமல்ஹாசனுக்கு எந்த விதத்தில் கை கொடுக்குமோ தெரியாது. ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு 5 நிமிடம் அவருடைய மக்கள் நீதி மய்யம் பற்றி ஒரு டாகுமெண்டரியை சாமர்த்தியமாக சேர்த்துவிட்டார். அந்த டாகுமெண்டரியும் மக்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ கமல்ஹாசனுக்குப் பயன்படும்.

விஸ்வரூபம் 2 - விழலுக்கு இறைத்த நீர்!

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • sivan - Palani,இந்தியா

  காலாவில் இந்து இறை மறுப்பு... பேசி பெரியாரை அம்பேத்காரை தூக்கி பிடிக்க நினைத்த ரஞ்சித்துக்கு ரஜினிக்கு .. மக்கள் வைத்தார்கள் ஆப்பு ரஜினி ரசிகர்கள் வேறு வழியில்லாமல் காலாவை கஷ்டப் பட்டு ஓட வைத்தார்கள். இங்கும் அப்படியே கமலின் மேலதிகாரி ஒரு தீவிர இந்து ( பிராமணராக காண்பிக்கிறார்களா? தன் பூணூல் துவேஷத்தை கமல் வெளிக் காட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாரா?.) ஒரு இந்து அதிகாரி நாட்டுக்கு துரோகம் செய்வான். ஆனால் காஷ்மீரில் முறை தவறி ஒரு இஸ்லாமியருக்கு பிறந்தவன் நாட்டுக்கு நேர்மையாக இருப்பான் .. என்று ரொம்ப மெனக் கெட்டு காட்ட பிரயத்தனப் பட்டு தோல்வி அடைந்திருக்கிறார் கமலகாசன் .இன்றுவரை பாகிஸ்தான் கொடியேந்தி நம் நாட்டு ராணுவத்த்தினரை கல்லெறிந்து தாக்கும் காஷ்மீரிகளை பார்க்கும் நமக்கு ... ஒரு காஷ்மீரி முஸ்லீம் தேசம் காப்பான்.. ஒரு இந்து துரோகம் செய்வான் போன்ற கமலஹாசனின் கதையமைப்பு வெறுப்பையே தரும். காஷ்மீரிகள் நம் ராணுவத்தின் மீது கல்லெறிவதால்.. நாம் யாரும் நம்முடன் இருக்கும் இஸ்லாமியர்களை பகையாக பார்க்கப் போவதில்லை. நம் அண்டை வீடு இஸ்லாமியர்களை வெறுக்கப் போவதும் இல்லை. ஆனால். கமலை போன்ற திரைக்கதை வேடதாரிகள்... இஸ்லாமியர்களுக்கு சாமரம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு ... மெனக் கெட்டு இந்து துரோகியை கதையில் காட்டுகிறேன் .. என்று கதை எடுப்பது எரிச்சலையே வரவழைக்கிறது. இவரின் அன்பே சிவம் படத்திற்க்கும் இதுவேதான் கதை அமைப்பு.. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான கிறிஸ்துவரும் இஸ்லாமியர்களும் நல்லவர்களாக படைக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் கடவுள் பேரை சொல்லி இந்து மட்டும் தவறு செய்பவனாக கமலஹாசன் காண்பித்திருப்பார். அவரின் இந்த பார்வைதான்.. அவரை இந்துக்களிடம் இருந்து விலக்கி வைக்கிறது. தவறிழைக்கும் காஷ்மீரிகளை .... நம் ராணுவத்தின் மீது வெறும் ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு கல்லெறியும் கஷ்மீரிகளை கண்டிக்க துப்பில்லாதவர் ... அவர்களுக்குசப்பை கட்டுவதற்காக..... ஒரு அதிகாரி இந்து மதத்தை பின்பற்றும் அதிகாரி ஒருவர் தவறிழைப்பதாக ... காண்பித்து காஷ்மீரி இஸ்லாமியருக்கு ஜலரா அடித்ததுதான் ... படம் குப்பைக்கு போனதன் காரணம் இனிமேலாவது கமலஹாசன் / ரஜினி போன்றவர்கள் .. இந்துக்களை வன்மையாக தாக்கி படம் பிடிப்பதை தவிர்ப்பது நலம். அதிலும் ரஜினி செய்தது மிகப் பெரிய தவறு வீட்டில் ராமரை வைத்து கும்பிடுபவன் அயோக்கியனாக இருப்பான் ... இந்து கடவுளே இல்லை பெரியார் மட்டுமே கடவுள் என்பவன் யோக்கியமாக இருப்பான் என்ற பாடாவதி சித்தாந்தத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ரஜினி போன்றவர்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. .. பாலச்சந்தரும்தான் படம் எடுத்தார். எப்போதுமே ஒரு மதத்தை உயர்த்தி மற்ற மதத்தினரை மட்டம் தட்டியா படம் எடுத்தார்? வித்தியாசமான மக்களை மக்களாகவே படம் எடுத்தார் தன் ஒரு பிராமணர் என்பதால் பிராமணரை அவர் உயர்த்தியும் எடுக்கவில்லை தன் ஒரு இந்து என்பதால்... கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் தன் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக வம்படியாக அவர்களை உயர்த்தி காட்டி படமும் எடுக்கவில்லை. இயல்பான தமிழக மக்களை பற்றிய சித்தரிப்பதாக இருந்தது அவரது படங்கள். அவரது மாணாக்கர்கள் என்று சொல்லித் திரியும் இவர்கள் இருவரும் .. ( அதுவும் கமல் ஆரம்பம் முதலே இந்துக்களை மட்டம் தட்டியே படம் எடுப்பர். ரஜினி ரஞ்சித்துடன் சேர்ந்து .. இந்துக்களை வன்மையாக தாக்கி படம் எடுக்க ஆரம்பித்துள்ளார் ) இவர்கள் இருவரும் சேர்ந்து அமைதியாக இருக்கும் இந்துக்கள் மீது சேற்றினை வாரி இறைப்பது... .. இவர்கள் இருவரின் படத்தின் தொடர் தோல்விக்கு காரணம் கமலஹாசன் அடுத்த படத்தை எடுக்கு முன் காஷிமீறில் போய் ஒரு பத்து நாட்கள் தங்கி .. அங்குள்ள காஷ்மீரி இஸ்லாமி யர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கட்டும்.

 • Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ

  குப்பை படம்.. திருட்டு சிடியில் பார்த்தாலும் இரண்டு மணி நேரம் வெஸ்ட்

 • Siva K - Chennai,இந்தியா

  படம் ஒரு அருமையான படம்..

 • குமரன்பத்மநாதன்,வாஷிங்டன் -

  Excellent movie. முதல் பாகத்தை விட இந்த பாகம் அருமை... இந்த விமர்சனம் எழுதிய நிருபருக்கு படம் புரியலயா இல்ல புடிக்கலியாங்குறதுதான் மேட்டர் ...கிரிஸ்டோபர் நோலன் படம் புரியல்லேன்னா புடிக்கலேன்னு சொல்லக்கூடாது...இதுதான் கமலுக்கு எப்பவும் நடக்கும்...பாவம் அவரு...பத்து வருஷம் கழிச்சு ஆகா ஓகோ ன்னு இதே படத்தை சொல்லுவாங்க..Best movie of the year so far.

  • Jayaprakaash - chennai

   நான் ஒப்புக்கொள்கிறேன். மிகவும் அருமையான படம்.இதை புரிந்துகொள்ள கொஞ்சம் ஸ்பெஷல் knowledge அவசியம் வேண்டும்.

 • பிரகாஷ் -

  60% படத்தை முதல் பாகம் எடுக்கும் போதே முடித்து விட்டார் என்பது உலகறிந்தது. இது மோசமான படம் என்றால் நல்ல திரைப்படம் என்பது எது. பாகம் ஒன்றை விட இதில் விறுவிறுப்பு குறைவு .விஸ்வரூபம் பாகம் ஒன்று பிடித்தவர்களுக்கு 2 ஆம் பாகம் மிகவும் பிடிக்கும். படத்தில் குறை என்று சொன்னால் அது பின்னணி இசை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே. கிராபிக்ஸ் கூட 5 ஆண்டுகள் முன்பே செய்தது என்பதால் தான் இன்றைய தரத்திற்கு குறைவாக தெரிகிறது , அதை திரைக்கதை சரி செய்து விட்டது . மொத்தத்தில் விஸ்வரூபம் 2 மக்கள் பார்த்து பாராட்ட வேண்டிய படம்.

  • Jayaprakaash - chennai

   YES இட் ஐஸ் ட்ரு

 • விவேக் -

  இந்த படத்தை பார்த்த பிறகு மய்யா நண்பர்கள் கும்பல் கும்பலாக கட்சியை விட்டு வெளியேறுவதாக கேள்வி

 • ரா.பாலமுருகன்.பம்மல் -

  படம் மொத்தமா நான்கரைமணிநேரம் எடுத்தேன்னு கமலே சொல்லியிருக்காரு. அதை அப்படியே ரிலிஸ் பண்ணா கமென்ட் போடுற அப்ரசண்டீங்க தைய தக்க குதிக்குங்க. அதுக்குதான் 2ஆம் பாகம்.

 • g.mohan - Manama,பஹ்ரைன்

  Movie is very good. Action movie we cannot except story. i like this movie.

 • sri - trichy,இந்தியா

  IS IT A FAILURE LIKE ஹிஸ் பாலிடிக்ஸ்.

 • ramesh - chennai,இந்தியா

  கமல் ஹாசன் மெது வெறுப்பா அல்லது எடப்பாடி ஆதரவு விமர்சனமா....................

 • Tamilselvan - Chennai,இந்தியா

  வழக்கம் போல குழப்புகிறார் மையம் இவர் சினிமா,அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  தியேட்டரில் படம் பார்த்து விட்டு இப்போதான் வந்து உங்கள் விமர்சனத்தை பார்க்கிறேன். மிக்க சரி. சில வசனங்கள் கூட 2013 வருஷத்தோடுதான் ஒத்து போகிறது. (கடந்த 64 ஆண்டுகால ஆட்சியில் உங்களது அரசாங்கம் என்ன செய்தது .. போன்ற வசனங்கள்). மிக சாமர்த்தியமாக சில காட்சிகளை உள்ளே சேர்த்து விஸ்வரூபம் 2 என ஐந்து வருடங்களுக்கு பிறகு வெளியிட்டு உள்ளார்கள். ஆனாலும் 5 வருடங்களுக்கு பிறகு அதே படத்தை (எனவும் கூறலாம்) பார்ப்பதால் தொய்வு இல்லாமல் போகிறது. அதை விட சாமர்த்தியம் மக்கள் நீதி மய்யம் பாட்டை படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் சேர்த்து இருப்பது.

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  "கேட்ட பய சார் இந்த காளி" என்று ரஜினி சொல்லுவது போல இதை படிக்கவும் "கிறுக்குப்பய சார் இந்த ..."

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  நல்லவேளை இந்தமாதிரி மட்டமான படத்திற்கு செலவு செய்யாமல் காப்பாற்றிய தமிழ் துப்பாக்கிக்கு நன்றி.

 • Chghj -

  hjjkkly do

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  மொக்கை படம். டோடல் வீண். பார்வையாளர்களை முட்டாளாக நினைப்பதுதான் கமல் வேலை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement