Advertisement

ஆத்துப்பாலம் பகவதி கோவில் 69ம் ஆண்டு திருவிழா

கோவை : ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள, கொடுங்கலுார் பகவதி அம்மன் கோவிலில், 69ம் ஆண்டு உற்சவ திருவிழா பக்தர்கள் புடைசூழ நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, நேற்று காலை, 5:30 முதல் 8:30 மணி வரை, ஸ்ரீ மகா கணபதி ேஹாமமும், சிறப்பு வழிபாடும், அலங்கார ஆராதனைகளும் நடந்தன.போத்தனுார் மைல்கல் அருகே உள்ள மங்கள விநாயகர் கோவிலிலிருந்து மாலை 5:00 மணிக்கு, அம்மனின் தீப ஆராதனை விளக்கு மற்றும் பால் கிண்ணம் ஏந்தி, கேரள செண்டை வாத்தியம், சிங்காரி மேளத்துடன் புறப்பட்ட அம்மன் ஊர்வலம் இரவு 7:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. வான வேடிக்கையுடன் அம்மனுக்கு தீபாராதனையும், அலங்கார பூஜையும் நடந்தன. இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது. 8:30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. இன்று கண்டாகர சுவாமிக்கு கெடா மற்றும் கோழி பலியிட்டு பூஜை நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடக்கிறது.

Advertisement
 
Advertisement