Advertisement

திருப்போரூர் அய்யப்பன் கோவிலுக்கு புலி வாகனம்

திருப்போரூர்: திருப்போரூர் அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள், புலி வாகனத்தை தானமாக வழங்கினர். திருப்போரூரில், அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், சிறப்பு பூஜைகளும், விளக்கு பூஜையும் நடைபெறும். வரும், 12ம் தேதி, 40ம் ஆண்டு விளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, அய்யப்பன் சுவாமிக்கு, புலி வாகனத்தை, தானமாக வழங்கியுள்ளனர். ஒரு லட்சம் ரூபாயில் செய்யப்பட்ட புலி வாகனம், கோவிலுக்கு நேற்று, தானமாக வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement