Advertisement

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - என்றென்றும் உல்லாசம்

சுயகவுரவத்துடன் வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!

குருபகவான் 9-ம் இடமான துலாம் ராசிக்கு செல்வது சிறப்பான அம்சம். வாழ்வில் குறுக்கிட்ட துன்பம் அனைத்தும் விலகும். மனதில் உல்லாசமும் உற்சாகமும் நிறைந்திருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் சிறப்பாக நடந்தேறும். 2018 பிப்.14ல் குரு 10-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பிறகு நன்மை உண்டாகாது. இருப்பினும் அவரின் 5-ம் இடத்து பார்வை மூலம் கெடுபலன் மறையும்.

ராகு உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கேது, ராசிக்கு 12-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை வரலாம். சனிபகவான் ராசிக்கு 10-ம் இடத்தில் இருப்பதால் தொழிலில் அவ்வப்போது பின்னடைவு ஏற்படலாம். 2017 டிச.19-ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறிய பின் லாபம் அதிகரிக்கும்.

இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். திருமணம் ஆடம்பர முறையில் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பெண்களால் உதவி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். எதிரி தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பீர்கள்.

பணியாளர்கள் குருவின் பலத்தால் மேன்மை அடைவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். ஆனால் பணத்திற்கு குறைவிருக்காது.

மாணவர்கள் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். எள், கரும்பு, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல விளைச்சல் உண்டாகும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கப் பெறுவர். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் இருப்பர். சுய தொழில் செய்யும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் குருபகவானால் குடும்பம், தொழிலில் பிரச்னை குறுக்கிடலாம். பண நஷ்டம், மனக்கவலைக்கு ஆளாக நேரிடலாம். 2018 ஏப்.9க்கு பிறகு நிலைமை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆடை, அணிகலன் சேரும். கணவன்- மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் செயல்பாடு பெருமைஅளிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. உடல்நலக்குறைவு அவ்வப்போது ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தடைகள் குறுக்கிடலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். ஆனால் ஏப்.9க்குப் பிறகு ஆதாயம்
அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். குருபகவானின் வக்கிர காலமான ஏப்.9க்கு பிறகு தடைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவுடன் கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பொறுத்திருக்க நேரிடும். ஆனால் பண விஷயத்தில் பிரச்னை இருக்காது.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. ஏப்.9க்கு பிறகு போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை ஆகிய பயிர்களில் அதிக மகசூல் காண்பர். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டு கொடுத்து போகவும். ஏப்.9க்கு பிறகு கணவரின் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். தொழில் புரியும் பெண்களுக்கு லாபம் கூடும்.

பரிகாரம்:
* சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேகம்
* சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய் தீபம்
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை

Advertisement
 
Advertisement