Advertisement

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - தடைக்கல் படிக்கல்லாகும்

சுறுசுறுப்புடன் பணிகளை செய்து முடிக்கும் மகர ராசி அன்பர்களே!

குருபகவான் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. 10ல் இருக்கும் குருவால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் ஏற்படும். இருந்தாலும் அவரது 5-ம் இடத்து பார்வையால் தடைக்கல்லை படிக்கல்லாக்கி முன்னேறுவீர்கள். 2018 பிப்.14-ல் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு குரு மாறிய பின்னர் பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும்.

ராகு 7-ம் இடமான கடகத்தில் இருப்பதால் இடமாற்றம் அவப்பெயரை சந்திக்க நேரலாம். கேது உங்கள் ராசியில் இருப்பதால் உடல்நலக்குறைவு உண்டாகலாம்.

சனிபகவான் 11-ம் இடத்தில் இருப்பதால் பொன், பொருள் கிடைக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். 2017 டிச.19ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுவதால் பண இழப்பு வரலாம். எதிரி தொல்லை குறுக்கிடலாம். இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம்.

2017 செப்டம்பர் – 2018 ஜனவரி குரு சாதகமாக இல்லாவிட்டாலும் அவரது 5-ம் இடத்து பார்வை மூலம் சாதனை புரிவீர்கள். வீட்டுத்தேவை குறைவின்றி நிறைவேறும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில், வியாபாரத்தில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். லாபம் சுமாராக இருக்கும். புதிய வியாபாரம் தொடங்கவோ, அதிக முதலீடு செய்யவோ வேண்டாம். அரசின் சோதனைக்கு ஆளாகலாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைப்பது நல்லது.
முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்களுக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால் விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. குருபகவானின் 5-ம் இடத்து பார்வையால் முயற்சிக்கான பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் வருமானம் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை.

2018 பிப்ரவரி – செப்டம்பர் குருபலத்தால் சிறப்பான நிலை காணலாம். பெண்களால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். கணவன்,- மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை ஏற்படும். ஏப்.9ல் குரு வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறிய பின், நன்மையை எதிர்பார்க்க முடியாது.

தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். ஏப்.9க்குப் பின், எதிரி வகையில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. ஏப்.9 முதல் அக்.3 வரை வேலைப் பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். கலைஞர்களுக்கு புதிய
ஒப்பந்தம் மூலம் போதிய வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏப்.9க்குப் பின் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். குருபகவானின் 9-ம் இடத்து பார்வை மூலம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். குருபகவானின் வக்ரகாலமான ஏப்.9க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

பரிகாரம்:
* சனிக்கிழமையில் ராமருக்கு துளசி அர்ச்சனை
* வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு
* கார்த்திகையன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

Advertisement
 
Advertisement