Advertisement

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) - பொறுமை தருமே பெருமை

வெற்றி நோக்குடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

குருபகவான் தற்போது உங்கள் ராசியில் அடியெடுத்து வைக்கிறார். மந்தநிலை, தடைகள் உருவாகலாம். எதிலும் பொறுமை காத்தால், பெருமை மிக்க எதிர்காலம் அமையும். குரு சிறப்பாக இல்லாவிட்டாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். 2018 பிப். 14-ல் விருச்சிக ராசிக்கு, குரு மாறிய பின் நன்மை அதிகரிக்கும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் உயரும். பகைவர் சரணடையும் நிலை உருவாகும்.

ராகு 10-ம் இடமான கடகத்தில் இருப்பதால் பொருள் இழப்பு, உடல் நலக்குறைவு ஏற்படலாம். கேது 4-ம் இடமான மகரத்தில் இருப்பதால் தீயோர் நட்பால்
அவதியுறலாம். உடல்நிலை பாதிக்கலாம்.

சனிபகவான் ராசிக்கு 2-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் பொறுப்பு, பணிச்சுமை அதிகரிக்கலாம். 2017 டிச.19-ல் சனி, தனுசு ராசிக்கு மாறிய பின் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும். இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. குருவின் பார்வை பலத்தால் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். பெண்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். யாரையும் நம்பி பண பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். எதிரி தொல்லை அவ்வப்போது தலைதூக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம்.

பணியாளர்களுக்கு கடந்த காலத்தை விட வேலைப்பளு அதிகரிக்கும். அதே நேரம் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குருபகவானின் 7-ம் இடத்து பார்வை மூலம் நன்மையை எதிர்பார்க்கலாம்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு கிடைக்காது. அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க
வேண்டியிருக்கும். மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சிலர் சேர்க்கையால் படிப்பில்
பின் தங்கலாம். விவசாயத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். அதிக முதலீடு தேவைப்படும் பயிர்களை தவிர்க்கவும்.

பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டியிருக்கும். செலவை குறைப்பது நல்லது. குரு பார்வையால் தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும்.கேதுவால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். சனிபகவானால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.
கணவன், மனைவியிடையே இணக்கம் ஏற்படும். பெண்களால் நன்மை உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு வந்து சேரும். குருபகவான் ஏப்.9- முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு
மாறியபின் நன்மை குறையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். போட்டிகளில் பங்கேற்று சாதனை படைப்பர். ஏப்.9 க்குப் பின் சற்று கவனம் தேவை.

விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பெண்கள் திருப்திகரமான வாழ்வைப் பெறுவர். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர பொருள் சேரும்.
தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.9க்குப் பின் குருபகவான் வக்கிரம் அடைவதால் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
* வெள்ளியன்று பத்ரகாளிக்கு எலுமிச்சை தீபம்

Download for free from the Store »

Advertisement
 
Advertisement