Advertisement

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) - கோடி பணம் தேடி வருது

முற்போக்கு எண்ணத்துடன் செயலாற்றும் கன்னி ராசி அன்பர்களே!

குருபகவான் 2-ம் இடமான துலாம் ராசிக்கு செல்வது சிறப்பான அம்சம். வாழ்வில் துன்பம் அனைத்தும் விலகி இன்பம் நிலைக்கும். சேமிக்கும் விதத்தில் பணம் கிடைக்கும். 2018 பிப்.14-ல் 3-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பின் நற்பலன் குறையும். முயற்சியில் தடை குறுக்கிடலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. இருப்பினும் குருவின் பார்வை பலத்தால் நன்மை உண்டாகும்.

ராகு தற்போது ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பான அம்சம். பொருளாதார வளம் சிறக்கும். கேது 5-ம் இடமான மகரத்தில் இருப்பதால் அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம்.

சனிபகவான் ராசிக்கு 3-ம் இடத்தில் இருப்பதால் தொழிலில் லாபம் கோடியாக பெருகும். 2017 டிச. 19-ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம்.

இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம்.2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
கையில் பெரும் பணம் புழங்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்ப தேவை பூர்த்தியாகும்.

ஆடம்பர வசதி பெருகும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் இணக்கம் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் சிறப்பாக நடக்கும். வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். அரசு வகையில் பிரச்னை குறுக்கிடலாம்.
பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு.

விவசாயிகள் அதிக மகசூல் கிடைக்க பெறுவர். நவீன இயந்திரம் வாங்க வாய்ப்பு உண்டு.
பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். புனித தலங்களுக்கு சென்று வருவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் முயற்சியில் தடை ஏற்படும். கணவன், -மனைவி
இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். பிள்ளைகள் வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம். ஏப். 9- முதல் அக்.3 வரை மீண்டும் குருபகவான் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் வருமானம் உயரும். கணவன்-, மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் பிரச்னை குறுக்கிடும். ஆனால் லாபத்திற்கு குறைவிருக்காது. கூட்டாளிகள் இடையே ஒற்றுமை சிறக்கும்.

பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
ஏப். 9-க்கு பிறகு பணியில் திறமை பளிச்சிடும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு ஒப்பந்தம் கிடைப்பதில் தடை குறுக்கிடலாம். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும்.

ஏப். 9-க்கு பின் கல்வி வளர்ச்சி ஏற்படும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவர். வழக்கு, விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து போகவும். ஏப்.9க்கு பிறகு நிலைமை சீராகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்:
* பவுர்ணமியன்று அம்மனுக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று காளிக்கு எலுமிச்சை தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு

Advertisement
 
Advertisement