Advertisement

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - மழலைக் குரல் கேட்கும்

அனைவரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்வது சிறப்பானதாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளம் பெருகும். பெண்களால் மேன்மை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5,7-ம் இடத்து பார்வை மூலம் நன்மை உண்டாகும். ஆனால் 2018 பிப்.14-ல் 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு குருபகவான் மாறுவதால் நன்மை பெற
இயலாது. ஆனால் அவரது 9-ம் இடத்துப்பார்வையால் நன்மை ஏற்படும்.

ராகு ராசிக்கு 2-ம் இடமான கடகத்தில் இருப்பதால் குடும்ப பிரச்னை உருவாகலாம். கேது 8-ம் இடத்தில் இருப்பதால் உடல் நலக் குறைவு வரலாம்

சனிபகவான் 6-ம் இடமான விருச்சிக ராசியில் இருப்பதால் பணப்புழக்கம், முயற்சியில் வெற்றி உண்டாகும். 2017 டிச.19-ல் சனி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறிய பின் நற்பலன் பெற முடியாது. அலைச்சல் அதிகரிக்கும். இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம்.

2017 செப்டம்பர் – 2018 ஜனவரி குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பு மேலோங்கும். உறவினர்களுடன் இணக்கம் உண்டாகும். உற்சாகமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரத்தில் சனி பகவானால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். எதிரிகளால் இருந்த
முட்டுக்கட்டை விலகும். வியாபார விஷயமாக சிலர் வெளிநாடு சென்று திரும்புவர்.
பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். குருபகவானின் 9-ம் இடத்து பார்வை மூலம் பொருளாதார வளம் மேம்படும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.

ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில்
சாதமான பலன் கிடைக்காது.

பெண்கள் குடும்பத்தினருடன் புனித தலங்களுக்கு சென்று வருவர். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். ஆடை, அணிகலன்கள்
வாங்கலாம்.

2018 பிப்ரவரி– செப்டம்பர் குருபகவான் 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவதால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். மந்த நிலை ஏற்படும். ஆனால் குருபகவானின் 9-ம் இடத்து பார்வையால் ஓரளவு நன்மை பெறலாம். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஏப்.9 முதல் அக்.3 வரை குரு வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுவதால் நற்பலன் தருவார். பெண்களால் நன்மை கிடைக்கும்.

கணவன்-, மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்துபோகவும். வியாபாரம், பணி விஷயமாக சிலர் வெளிநாடு செல்ல நேரிடும். சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். புதிய முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.

பணியாளர்களுக்கு பொறுமை தேவை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். ஏப். 9- முதல் அக்.3 வரை முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டியில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம்.வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். வாக்குவாதத்தை
தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தடைபட்ட திருமணம், சுபநிகழ்ச்சிகள் ஏப்.9க்கு பின் கைகூடும்.

பரிகாரம்:
* வெள்ளியன்று பாம்பு புற்று கோயில் வழிபாடு
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம்
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

Advertisement
 
Advertisement