Advertisement

ஆடி கடைசி வெள்ளி: ராசிபுரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

ராசிபுரம்: ராசிபுரத்தில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன. ஆடி மாதத்தை, அம்மன் மாதம்; அம்பாள் மாதம் என்று சிறப்பித்து கூறுவர். வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்கள், விரத வழிபாடுகள் களை கட்டி விடும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. ஆடி கடைசி வெள்ளியான நேற்று, ராசிபுரம் - புதுப்பாளையம் சாலை, எல்லை மாரியம்மன், ரயில்வே ஸ்டேஷன் சாலை, காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. எல்லை மாரியம்மன் மற்றும் முருக பெருமானை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஐந்து, 10, 50, 100, 500, 2,000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்திருந்தனர். ஏராளமான பக்தர்கள், சுவாமிகளை தரிசித்து சென்றனர். ஜங்சன் காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Advertisement
 
Advertisement