Advertisement

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) லாபமோ லாபம் கேதுவால் யோகம்

வெள்ளை மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடமான சிம்மத்தில் இருந்து ராகு தற்போது 5-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பம், பிரச்னை உருவாகலாம். 12-ம் இடமான கும்பத்தில் இருந்த கேது 11-ம் இடமான மகரத்திற்கு மாறுவதால் லாபம் அதிகரிக்கும். செயலை வெற்றிகரமாக முடிக்கும் யோகம் உண்டாகும். சனிபகவான் 9-ம் இடத்தில் இருப்பதால் எதிரி தொல்லை தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். டிச. 18-ல் அவர் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பானது அல்ல. அவப்பெயர் ஏற்படலாம்.பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்களால் இடையூறு வரலாம்.

குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செப். 1ல் குருபகவான் 8-ம் இடத்திற்கு செல்வதால் நன்மை குறையும். மனதில் வேதனை குடி கொள்ளும். பொருளாதார சரிவும் உண்டாகும். ஆனாலும், அவரது பார்வை பலத்தால் இடையூறுகளை முறியடிக்க முடியும். 2018 பிப்ரவரி 13ல் குரு, 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பான அம்சமாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

இனி கால வாரியான பலனை விரிவாக காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் பொருளாதார வளம் பெருகும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். வாகன பயணம் இனிமை தரும். கணவன்-, மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக வருமானத்தைக் காணலாம். புதிய வியாபாரத்திலும் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். கேதுவால் பகைவர் சதியை முறியடிக்கும்

வல்லமை உருவாகும். பணியாளர்களுக்கு கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அதிகாரிகளின்ஆதரவுகிடைக்கும். ஆக. 31க்குப் பிறகு பொருளாதார சரிவு ஏற்படலாம். கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆக. 31- க்கு பிறகு கூடுதல் கவனம் தேவை. விவசாயிகளுக்கு நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.

2018 ஜனவரி – 2019 பிப்ரவரி கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். சேமிக்கும் விதத்தில் கையில் பணம் புழங்கும். சனிபகவான் சாதகமற்று இருப்பதால் அனுபவசாலிகளின் ஆலோசனையை கேட்பது நல்லது. 2018 ஏப். 9- முதல் 2018 செப். 3- வரை எதிலும் விழிப்படன் இருப்பது நல்லது. வீண் விரோதம், நிலையற்ற தன்மை ஏற்படலாம். கணவன், -மனைவி இடையே விட்டுக் கொடுக்கும் தன்மை அவசியம். 2018 பிப். 13-க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். தொழில், வியாபாரத்தில்
முன்னேற்றம்காணலாம்.

வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். 2018 பிப். 13க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. 2018 பிப். 13-க்கு பிறகு பதவி உயர்வு காண்பர்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெறுவர். கேதுவால் வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை வியாழன்று ராகவேந்திரருக்கு நெய்தீபம். வெள்ளிக்கிழமை மாரியம்மன் வழபாடு

Advertisement
 
Advertisement