Advertisement

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) மூடிய கதவு திறக்கும் முன்னே வழி பிறக்கும்

நன்றி மறவாத மனம் படைத்த கும்ப ராசி அன்பர்களே!

ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு 6-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். கடந்த காலத்தில் இருந்த தடையனைத்தும் விலகும். மூடிய கதவு திறப்பதால் முன்னேற்றத்திற்கான வழி உண்டாகும். ராசியில் உள்ள கேது தற்போது 12-ம் இடமான
மகரத்திற்கு செல்வதால் பண விரயம், உடல் உபாதை ஏற்படலாம்.

ராசிக்கு 10-ல் உள்ள சனிபகவானால் தொழிலில் பின்னடைவுஏற்படலாம். ஆனால் அவர் டிச.18-ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். அவரால் பொன்,பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். குருபகவான் 8-ம் இடத்தில் இருப்பதால் மனவேதனை, வீண் விரோதம் ஏற்படலாம். ஆக. 31-க்குப் பிறகு அவர் 9-ம் இடத்திற்கு செல்வதால் நன்மை அதிகரிக்கும். நினைத்த செயல் வெற்றிகரமாக நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். 2018 பிப்.13-ல் குருபகவான் 10-ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை பெற இயலாது. அவரது பார்வை பலன் கைகொடுக்கும்.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் ராகு, குரு பலத்தால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் பெருகும். குடும்பத்தேவை அனைத்தும் குறையின்றி நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை தலைதூக்கினாலும், அதை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.

பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். விருது, பாராட்டு போன்றவை தள்ளிப் போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை உதவிகரமாக இருக்கும். குருவால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களின் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கைவிட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். 2018 ஜனவரி – 2019 பிப்ரவரி
கேதுவால் பணவிரயம் இருந்தாலும், ராகு உங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பார். முயற்சியில் வெற்றியை வாரி வழங்குவார். கையில் எப்போதும் பணம் புழங்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். 2018 பிப். 13- க்கு பிறகு குருவால் கணவன்-, மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் தடையின்றி முன்னேறலாம். தொழில் விஷயமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகாது. பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். நிர்வாகத்தினர் மூலம் பரிசும், பாராட்டும் கிடைக்கும். 2018 பிப்.13-க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம்கிடைக்கப் பெறுவர். வருமானம் சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைவர். 2018 ஏப். 9- முதல் 2018 செப். 3- வரை போட்டிகளில் பங்கேற்று வெற்றி கிடைக்கப் பெறுவர். விவசாயிகள் முன்னேற்றமான பலன் அடைவர். பெண்கள் குடும்பத்தாரின் அன்புக்குரியவராகத் திகழ்வர். விருந்து, விழா என அடிக்கடி செல்வர். 2018 பிப்.13க்கு பிறகு குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். தொழில் புரியும் பெண்கள் வங்கி கடன் மூலம் விரிவுபடுத்துவர்.

பரிகாரம்: செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை. ஞாயிறு ராகுகாலித்தில் காளி வழிபாடு வெள்ளியன்று லட்சுமிக்கு நெய்தீபம்.

Advertisement
 
Advertisement