Advertisement

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) (சாதிக்க ஆசையா எதிர்நீச்சல் அடிங்க!)

அனைவரிடமும் அன்பு காட்டும் மகர ராசி அன்பர்களே!

ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கும் ராகு, தற்போது 7ம் இடமான கடகத்திற்கு செல்வதால் தூரதேசம் செல்லவும் அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புண்டு. 2ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, இப்போது உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் காரிய தடை, உடல் உபாதை வரலாம்.

11ம் இடத்தில் உள்ள சனிபகவானால் பணப்புழக்கம் இருந்திருக்கும். டிச.18ல் அவர் 12ம் இடத்திற்கு மாறுகிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். எதிரிகளால் இடையூறு உருவாகலாம். எதிர்நீச்சல் அடித்து உழைத்தால் மட்டுமே வாழ்வில் சாதிக்க முடியும். குருபகவான் 9ம் இடத்தில் இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். ஆக. 31க்குப் பிறகு 10ம் இடத்திற்கு செல்கிறார். அதன் பின் பொருள் நஷ்டம், மனசஞ்சலம் உண்டாகும். 2018 பிப்.13ல் 11ம் இடத்திற்கு மாறிய பின், பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும்.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கைகூடும். கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டாகும். 2017 ஆக. 31க்கு பிறகு குரு பகவானால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். தொழில் வியாபாரிகளுக்கு வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வாழ்வில் மேம்பாடு அடைவர். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க நேரிடும். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆக. 31க்கு பிறகு குடும்பத்தில் விட்டுக்கொடுக்கவும். 2018 ஜனவரி– 2019 பிப்ரவரி ராகுவால் இடப்பெயர்ச்சி, அவப்பெயரைச் சந்திக்க நேரலாம். நட்பு விஷயத்திலும் விழிப்புடன் இருப்பது நல்லது. கேதுவால் முயற்சியில் தடை, உடல் உபாதை ஏற்படலாம். குரு சாதகமாக இல்லை என்றாலும் அவரது பார்வை பலத்தால் தடைகளை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். 2018 பிப்.13க்குப் பிறகு குருவால் சிறப்பான நிலை உருவாகும்.

குடும்பத்தில் பெண்களால் பொன் பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். குரு பகவான் 2018 ஏப். 9 முதல் 2018 செப். 3 வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மையை எதிர்பார்க்க முடியாது. தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். புதிய வியாபார முயற்சியிலும் ஈடுபடுவது கூடாது. இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு.அரசின் சோதனைக்கு ஆளாகலாம்.

பணியாளர்கள் வேலைப் பளு, அலைச்சலுக்கு ஆளாவர். 2018 பிப்.13க்கு பிறகு வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆனால் விடா முயற்சிஅவசியம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. 2018 பிப்ரவரி 13க்கு பிறகு கல்வி வளர்ச்சி காண்பர். குருபார்வையால் போட்டியில் வெற்றி பெறுவர். விவசாயம் சீராக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சுமாரான பலன் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். குருவின் 5ம் பார்வையால் பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளி ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம், சனிக்கிழமையில் கிருஷ்ணருக்கு அர்ச்சனை.

Advertisement
 
Advertisement