Advertisement

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வந்தார் இருந்தார் போனார் என இருப்பாரா! 55/100

பிறரின் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கும் தன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இது வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்தார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் உங்கள் முயற்சியில் பல்வேறு ÷ தால்விகளை தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் அதிகம் ஏற்பட்டு இருக்கும். சிலர் எதிரிகளுக்கு அடங்கி போய் இருப்பர். உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகி அது பகையாகக் கூட மாறி இருக்கும். இந்த நிலையில் இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். ஆனால், தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாக நோகச் செய்யலாம். இதுவெல்லாம் சனி 10-ம் இடத்தில் இருக்கும் போது தரும் பொதுவான பலன்கள். அதற்காகக் இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வேறு கிரகங்கள் அவ்வப்போது நன்மை தர காத்திருக்கின்றன. சனியைத் தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது ஆகியவற்றின் நிலை மற்றும் மாற்றங்களையும் சற்று கவனிக்க வேண்டும்.

2015ம் ஆண்டு நிலை எந்த முக்கிய கிரகமுமே சாதகமான இடத்தில் இல்லை. ஆனாலும், குருவின் 9-ம் இடத்து பார்வை உங்களுக்கு மிக சிறப்பாக அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதற்காக அது முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் தம்பதியி னரிடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகும்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். ஆரம்ப காலத்தில் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக முன்÷ னற்றம் தருவதாக அமையும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே அவர்கள் வகையில் எப்போதும் கவனமாய் இருக்கவும். சனி பகவான் அவப்பெயரையும் தருவார். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனம் தேவை. விவசாயிகளுக்கு மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப் பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலத்தில் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

குரு 2015 ஜூலை மாதம் 4-ந் தேதி அன்று சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் மாறி ஒற்றுமை ஓங்கும்.

பணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ÷ வலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் வெற்றி அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். 2016ம் ஆண்டு நிலை குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டிருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பணவரவு கூடும். ÷ தவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் குதுõகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியில் சற்று முயற்சி எடுத்தால் ÷ காரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். நண்பர்கள் என்ற போர்வையில் விரோதிகளும் வர வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டி வரும். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியைப் பெறுவர். உடல் நலம் சிற ப்படையும். பிள்ளைகள் உடல்நலம் மேம்படும்.

2017 ஜூலை வரை தடைகள் அகலும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களைப் புகழ்வர்.மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைப் புரிந் துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணியில் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு அரசின் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர்.

2017 டிசம்பர் வரைராகு பல்வேறு முன்னேற்றங்களைத் தருவார். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொரு ளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும். பணியில் சீரான நிலை இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்சல் இருக்காது. தொழிலதிபர்கள், வியாபாரிகள் கடந்த போட்டியாளர்களின் பிடியிலிருந்து விடுபடுவார்கள். தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் நிவாரணம் பெறுவர். இதனால் வீண்விரயம் தடைபடும். கலைஞர்கள் பிரச்னைகளின்றி முன்னேறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவிஷயத்தில் தேவைகள் பூர்த்தி அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பர். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர். விவசாயிகள் எள், கரும்பு, உளுந்து மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.மொத்தத்தில் சனீஸ்வரர் வந்தார் இருந்தார் போனார் என்ற சுமாரான நிலையே இந்தப் பெயர்ச்சி காலத்தில் இருக்கும். இப்படி இருந்தாலே ஓரளவுக்கு நல்ல விஷயம் தானே!

பரிகாரப்பாடல்!

சண்முக சரவண குருபர குகனேசங்கரி உமைதரும் சுந்தரபாலாகுக சரவணபவ சிவகுருநாதா
இகபர சவுபாக்கியம் அருள்வாயே!

பரிகாரம்!

நவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்திஆசி பெறுங்கள். வசதி படைத்தவர்கள் ஏழைகள் பிழைக்க பணம் கொடுத்து உதவி செய்யலாம். விநாயகரையும் , ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். முருகன் கோயி லுக்கு சென்று வாருங்கள்.

Advertisement
 
Advertisement