Advertisement

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பாத்துட்டார் பாத்துட்டார் ஐயையோ பாத்துட்டார்! 45/100

கொண்ட குறிக்கோளில் சிறிதும் தவறாமல் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே!

நீங்கள் பிறரது குற்றங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறன் கொண்டவர்கள். சனிபகவான் இதுவரை 11ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மை தந்தார். செய்தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருந்திருக்கும். பொன், பொருள் என வா ங்கி இருப்பீர்கள். இப்போது சனிபகவான் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், உங்கள் மீது அவரது பார்வை பட்டு விட்டது. புரிந்து கொண்டிருப்பீர்கள்! அதாவது ஏழரை சனி உங்களுக்கு ஆரம்பித்து விட்டது. சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு.இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7ம் இடத்து பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். இது தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு வும், ராகுவும் அவ்வப்போது நன்மை தருவார்கள். மேலும் விரைவாக சுழலும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்களும் இடையிடையே நற்பலனை கொடுக்க தவறமாட்டார்கள். அந்த வகையில் மற்ற முக்கிய கிரகங்களின் நிலையை சற்று காண்போம்.

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் வரலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார இழப்பு வரலாம். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் எதிலும் அசட்டையாக இருக்க வேண்டாம். அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில், வியாபாரம் தற்போது தொடங்க ÷ வண்டாம். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். அரசிய ல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெற அதிக பிரயாசைப் பட நேரிடும். விவசாயி கள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். ÷ வலைக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பளுவைச் சுமக்க வேண்டி வரும். உடல்நல பாதிப்பு வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

2015 ஜூலை 4ல், குருபகவான் சிம்மத்திற்கு மாறி நன்மை தருவார். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அனைத்தும் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர்.குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபங்கள் கைகூடும். வீடு, மனை வா ங்கும் யோகம் கூடி வரும். பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலைப்பளு குறையும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
அரசின் உதவி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறப்பெற்று முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம். விவசாயிகளுக்கு நெல், கோதுமை, கேழ்வரகு பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டி வரும்.

2016ம் ஆண்டு நிலைமுக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சனிபகவானின் 7-ம் இடத்துப் பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும். இந்த காலத்தில் ராகு கன்னியில் இருந்து சிம்மத்திற்கும், கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கு மாறுகின்றனர்.கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் ராகு சாதகமற்ற நிலைக்கு வருகிறார்கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அதிக நன்மை உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

2017 ஜூலை வரைகுடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வ ருவீர்கள். வேலையில் கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். கலைஞர்கள் மிகச்சிற ப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல் நலம் நன்றாக இ ருக்கும்.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வாகன சுகம் ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. நகைகளை பாங்கில் வைக்கவும். ஏற்கனவே பணி இழந்தவர்கள் முயற்சி செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆ லோசனையுடன் முன்னேற்றம் காணலாம். வாடிக்கையாளர்கள் அனுகூலமாக இருப்பர். வெளியூர் பயணம் சிறப்பை தரும். வேலை இன்றி இருப் பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஆனால், உங்கள் பெயரில் துவங்காமல் வீட்டில் உள்ளவர்கள் பெயரில் ஆரம்பிக்க வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்களுக்கு சான்ஸ் பெற கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். எனினும், கடந்த கால உழைப்புக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். அரசிய ல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடங்களைப் பெறுவர். விவசா யம் சிறப்பாக நடக்கும். நெல், கோதுமை, கொண்டை கடலை, கேழ்வரகு சிறப்பான மகசூலைக் கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இரு க்கும். ஆனால், புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் சிறப்பு பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவைச் சுமக்க வேண்டியது இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரப்பாடல்!

பரதனும் தம்பி சத்துருக் கனனும்இலக்குமனோடு மைதிலியும்இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்றஇராவணாந் தகனை எம்மானைகுரவமே கமழும் குளிர்பொழி லுõடுகுயிலொடு மயில்கள் நின்றாலஇரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத்திருவல்லிக்கேணி கண்டேனே!

பரிகாரம்!

ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். பத்ரகாளிக்கு தீபம் ஏற்றுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மாலை அணிவித்து வழிபடுங்கள். திருச்செந்துõர் சென்று வரலாம். ஏழரை சனிகாலம் எனவே சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் மற்றும் ராமர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

Advertisement
 
Advertisement