Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அர்த்தாஷ்டம சனி விலகியாச்சு! இனி எல்லாம் சுகமே!60/100

தன்னம்பிக்கை மிக்கவராகத் திகழும் கடக ராசி அன்பர்களே!

குடும்பத்தாரிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் நீங்கள் சாமர்த்தியமாக பேசும் திறமை படைத்தவர்கள். இதுவரை சனி 4 ல் இருந்து பல்வேறு பிரச்னைகளை தந்திருப்பார். குறிப்பாக உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல்நிலை பாதிப்படைந்து உங்களை கவலைக்குள்ளாக்கி இருக்கலாம். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. 5-ம் இடத்திற்கு செல்வது சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனாலும் 4-ம் இடத்தில் இருந்தது போன்ற பின் தங்கிய பலனை தற்போது தரமாட்டார். 5-ல் சனி இருக்கும் போது குடும்ப பிரச்னைகளை தருவார் என்பது பொது விதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் குரு, ராகு, கேது போன்ற மற்ற கிரகங்களாலும் நன்மைகள் கிடைக்கும். மொத்தத்தில் அர்த்தாஷ்டம சனி விலகி விட்டதால், ஓரளவு சுபபலன்கள் நடக்க துவங்கி விட்டதை நீங்கள் உணரலாம்.

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது மனக்கசப்பு வரத்தான் செய்யும். ஆனால் அவை உங்களின் மென்மையான அணுகுமுறையால் விலகி விடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லமுறையில் கைகூடி வரும். ஆனால், அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகளால் கடன் வாங்கும் சூழ் நிலை உருவாகலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கவே செய்யும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. அதிர்ஷ்டவசமாக சிலருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றம் ஏற்படுமோ என்ற பயமும் தொடர்ந்து கொண்டிருக்கலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அதிகமாக அலைச்சல் இருக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உ ருவாகலாம். அரசாங்கத்தால் உதவி அவ்வளவு எளிதாக கிடைக்காது. மறைமுக எதிரிகளால் இடையூறு அவ்வப்போது தலை துõக்கினாலும் அதை உங்களின் புத்திசாலித்தனத்தால் எளிதில் முறியடிப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பொருள் விரயம் ஏற்படலாம். இயன்ற அளவு சிக்கனமாக இருப் பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரம் எதிர்பார்த்த புகழும், நற்பெயரும் உங்களை வந்து சேரும். அரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். பொதுமக்கள் மத்தியில் முன்பை விட தற்போது நன்மதிப்பு அடைவர். மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபட முயற்சிப்பது நல்லது. குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் அறிவுரையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் காணலாம். வழக்கறிஞர், ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் அடைவர். விவசாயிகள் அளவுக்கதிகமான பண முதலீடு செய்வது கூடாது. வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே கிடைக்கும். ஆனால், அதிக பாதகம் ஏற்பட வாய்ப்பில்லை. பெண்கள் விருப்பம் போல ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. உடல் நலம் சிறப்படையும்.

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். துணிச்சல் மனதில் பி றக்கும். அதிர்ஷ்டவசமாக வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதித் திட்டம் உங்களிடம் எடுபடாமல் போகும். அவர்கள் சரணடையும் நிலையும் உருவாகும்.

2016 ம் ஆண்டுநிலை குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் தாமதம் உருவாகலாம். ஆனால் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் விடாமுயற்சி மூலம் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு உண்டாக இடமுண்டு. பணியாளர்கள் சுமாரான நிலையில் இருந்து வருவர். பணிச்சுமையால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மிதமான லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். கலைஞர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயத்தில் போதிய வருவாயை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல்அதிகரிக்கும். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட்டு வருவர்.

2017 ஜூலை வரை குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட்டாலும் முடிவு சுபமாக அமையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு அடிக்கடி உருவாகும். பணிய õளர்களுக்கு கடந்த காலம் போல் பணியிடத்தில் சுதந்திரம் இல்லாமல் போகலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டி பறிக்கப்படலாம். வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மையளிக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருந்து வருவர். சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் கடின முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைக் காண்பர். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வ ருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் பிரச்னை வரத்தான் செய்யும். சற்று விலகி இருப்பது நல்லது. குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது அவசியம். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். பணியில் தடைகள், திருப்தியின்மை ÷ பான்றவை மறையும். வேலையில் உற்சாகம் பிறக்கும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்கும். அரசிய ல்வாதிகள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். தொண்டர், மக்களின் நன்மதிப்புக்குரியவராவர். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் அதிக முத லீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரம் சுமாராகத் தான் இருக்கும். சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது. பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். தாய் வீட்டில் இருந்து வெகுமதி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு விரைவில் கைகூடும்.அக்கம் பக்கத்தினர் உங்களை பெருமையாக பேசுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். உடல் நலத்தைபொறுத்தவரை ஆரோக்கியம் சீராகும். கேதுவால் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் மறைந்து விடும்.

பரிகாரப்பாடல்!

சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றிஉத்தரியத் தொடித்தோள் போற்றிகரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப்பால் சுரந்த கலசம் போற்றிஇரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்டஅங்கயற் கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நுõபுரம்சிலம்பும் அடிகள் போற்றி

பரிகாரம்!

விநாயகரையும், அம்பிகையையும் வணங்கி வாருங்கள். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வாருங்கள். அல்லது அருகில் இருக்கும் புற்றுள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் உங்கள் துயர் அனைத்தும் நொடியில் நீங்கும்.

Advertisement
 
Advertisement