Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) நல்லதைச் செய்தவரு கண்டகச் சனியா மாறிப் போனாரே! 55/100

எடுத்த முயற்சியை கச்சிதமாக செய்து முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

நீங்கள் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட மாட்டீர்கள். இது வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், எடுத்த காரியத்தில் வெற்றியையும் கொடுத்திருப்பார். மேலும் உங்களுக்கு அபார ஆற்றலை தந்து எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கியிருப்பார். உடல் நலத்தையும் சிறப்பாக பாதுகாத்திருப்பார். இந்த நிலையில் சனி 7-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதை கண்டகச்சனி என்பர். பேச்சு வழக்கில் கண்டச்சனி என்பது இதுதான். இப்போது அவரால் முன்பு போல் நற்பலனை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்னையை உருவாக்குவர். அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புண்டு. வெளியூரில் வசிக்க நேரிடும். வேண்டாத நண்பர்களால் வாழ்வில் அவதி உண்டாகும் என்பது பொதுவான பலன்கள். இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. சனி சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் அவ்வப்போதுநன்மையை வாரி வழங்குவார்கள்.

2015ம் ஆண்டு நிலை பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்டு நடப்பது நல்லது. மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். உங்கள் செல்வாக்குக்கு குறைவு எதுவும் உண்டாகாது. சிலர் வீண் மனக்குழப்பத்தில் இருப்பர். கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும்தன்மையும் மிகவும் அவசியம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். புத்தாடை அணிகலன்களை மனம் போல வாங்கலாம். பணியாளர்களுக்கு இடமாற்றப் பீதி வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்க வாய்ப்பில்லை. யாரிடமும் கவனமுடன் பழகுவதால் பிரச்னை குறையும். புதிய வியாபாரத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டிஇருக்கும். ஆன்மிகப் பணியில் ஈடுபடுபவர்கள் மேன்மை அடைவீர்கள். தன்னலமற்ற சேவைக்கு நல்ல மரியாதையும், கவுரவமும் சமூகத்தில் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று நட ப்பதன் மூலம் வளர்ச்சியை பெற முடியும். விவசாயிகள் மானாவாரி பயிர்களின் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரத்தின் முடிவு சுமாராகவே இருக்கும். பெண்கள் குடும்பச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நன்மைய ளிக்கும். அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிபளுவை சுமக்க வேண்டியிருக்கும். புதிய ஆடை, நகைகள், அழகு சாதன பொருட்கள் வாங்க இடமுண்டு. உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதி ப்பட்டவர்கள் பூரண குணம் பெற்று நிம்மதி காண்பர்.

2015 ஜூலை 4ல் குருசிம்மத்திற்கு மாறுகிறார். அவர் மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார் 2016ம் ஆண்டு நிலைகுருகுடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார். குழந் தை பாக்கியம் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதையுடன் சமூகத்தில் வலம் வருவீர்கள். கடந்த காலத்தில் இருந்த மன உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் உருவாகும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டிஇருக்கும். ஆனால் அதற்கான வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும். எந்த தொழில், விய õபாரத்திலும் அதிக பண முதலீடு செய்ய வேண்டாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரத்தான் செய்யும். அரசாங்க வகையில் உதவி கிடை ப்பதில் தாமதமாகலாம். பொருள் விரயமும் உருவாகலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசாங்க வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியிருக்கும். மக்கள் நலப்பணிகளில் ஆர்வம் காட்டுவர். மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். விவசாயிகள் அதிக செலவு பி டிக்கும் பயிரை தவிர்ப்பது நல்லது. விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உறவினர்களின் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர். உடல்நலமும் சிறப்பாக இருப்பதால் மருத்துவச் செலவு குறையும்.

2017 ஜூலை வரை குரு உங்கள் ராசிக்கு 5ல் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6ல் இருக்கும் குரு உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும் கவலை வேண்டாம். குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் மனதில் பிறக்கும். பண வரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொ ருட்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூட வாய்ப்பில்லை. புதிய முயற்சியில் தாமதம் ஏற்படலாம். பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் தான் நல்ல முன்னேற்றம் காண்பர். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரச் செலவை குறைப்பது புத்திசாலித்தனம். வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமையால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

2017 டிசம்பர் வரை ராகு நன்மை வழங்கத் தொடங்குவார். ராகு செயலில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் உண்டாக்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் வழங்குவார். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் உருவாகலாம். மறைமுக எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து கொள்வது நல்லது. வியாபாரிகள் பண விஷய த்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி எடுக்க வேண்டிஇருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பர். வாழ்வில் நல்ல வசதியுடன் இருப்பர். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் பூரணமாக குணமடையும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். இதுவரை இருந்து வந்த பயணப் பீதி மறையும்.

பரிகாரப்பாடல்!

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்க முதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

பரிகாரம்!

ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஞானிகள், சன்னியாசிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து வணங்குங்கள்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement