Advertisement

'வெயிட்டான' இலாகாவுக்கு ரெடியாகிட்டாரே... அண்ணே

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சரும், தற்போதைய, எம்.எல்.ஏ.,வுமான, எ.வ.வேலு, தன் சொந்த தொகுதியான, திருவண்ணாமலையில், மகளிருக்கான இலவச தையல் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.


அங்கு, தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக, எம்.எல்.ஏ., வேலு பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி, 'தி.மு.க., ஆட்சியில், துணை முதல்வராக, ஸ்டாலின் இருந்த போது, பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.


குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். பெண்களின்முன்னேற்றத்துக்காக, அயராது பாடுபடுகிறார்.'அவரால் தான், சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. தொடர்ந்து, பெண்களின்உரிமைகளுக்காக, வாதாடி வருபவர், ஸ்டாலின்ஒருவர் தான்' என்றார்.

மூத்த நிர்வாகி ஒருவர், 'அடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'வெயிட்டான' மந்திரி பதவிக்கு, இப்போவே, ரெடியாகிட்டாரே... அண்ணே' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement