Advertisement

துவச்சு தொங்க போட்டுருப்பாரு, ஐ.ஜி.,

மதுரை, குருவித்துறை, சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், கொள்ளைப் போன, நான்கு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. சிலை தடுப்பு பிரிவு போலீஸ், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், கோவிலுக்குள் கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட இரும்பு கிரில் கதவை ஆய்வு செய்தார். அதில், ஒரு சாதாரண பூட்டு தொங்கி கொண்டிருந்தது. அதை பார்த்த அவர், 'இந்த பூட்டு, 1.20 லட்சம் ரூபாய் இருக்குமாய்யா...' என, கோவில் செயல் அலுவலர், செந்தில்குமாரிடம் கடுப்பாக கேட்டார். அர்த்த மண்டபம் செல்லும் வழியில் இரும்பு கிரில் கேட் திறந்து இருந்தது. 'இது, ஏன் திறந்தே கிடக்கிறது... கொள்ளையடிக்க வசதியாக, நீங்களே, கதவை திறந்து வைத்து இருக்கிறீர்களே... ரொம்ப சந்தோஷம்' எனக் கூறி, அர்ச்சகர்களிடம், 'பாதுகாப்பு விஷயத்தில், இப்படி கோட்டை விட்டீர்களே...' என ஆதங்கப்பட்டார், பொன் மாணிக்கவேல். கோவில் ஊழியர் ஒருவர், 'நல்ல வேளை... கொள்ளைப் போன சிலைகள் திரும்பி கிடைத்து விட்டன. இல்லேன்னா, ஐ.ஜி., எங்களை துவச்சு தொங்கப் போட்டுருப்பாரு' எனக் கூற, மற்ற ஊழியர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்த பூட்டுகூடநல்லதாக வாங்க வக்கு இல்லாத அறநிலையத்துறை யாரேனும் உபயதாரரிடம் கேட்டால் வாங்கித்தந்துவிட்டு போகிறார்கள்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    There may be some 'deal' going on accordingly cheap lock and ing grill gate would have been part of It

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement