Advertisement

'வங்கி அதிகாரிகளை செம மாட்டு மாட்டுறாரு!'

துப்புரவு தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த, ஆய்வு கூட்டம், கலெக்டர், நடராஜன் தலைமையில், மதுரையில் நடந்தது. 'கல்லுாரியில், மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை' என, தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். வங்கி அதிகாரிகளை அழைத்த, கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில், துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர், ஜெகதீஷ் ஹெர்மனி, 'மாணவியர் படிப்பதற்கு கோடிக்கணக்கில் கடன் கேட்டால் தானே பிரச்னை... கல்வி கடனாக, ஓரிரு லட்சம் தானே கேட்கின்றனர். அவர்களை நம்பி, தாராளமாக கடன் வழங்கலாம்; அவர்கள் ஒழுங்காக திருப்பி செலுத்தி விடுவர்' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'விஜய் மல்லையா, நிரவ் மோடியை மனதில் வைத்து, ஜெகதீஷ் ஹெர்மனி என்னமாய், வங்கி அதிகாரிகளை பிடிச்சு செம மாட்டு மாட்டுறாரு...' எனக் கூற, மற்றவர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கலெக்டரிடம் சரின்னு சொல்லிட்டு அப்புறம் தேவையில்லாத ஆவணங்களைக்கேட்டுகல்வி கடன் இல்லை என்று சொல்வது வாங்கி அதிகாரிகளுக்கு பழக்கம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மல்லியஸ் will 'share' a good lump from their grant of loan Instead of sanctioning to 100 students the bank authorities can see multifold from one or to Mallyas

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement