Advertisement

'பல்லக்கு துாக்கிய உதயகுமாரை பாராட்டணும்'

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம், தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தலைமையில், மதுரை யில் நடந்தது. கூட்டம் முடிந்து வந்த அவரிடம், 'துணை முதல்வர் குறித்து, தினகரன் ஆதரவாளர், தங்கதமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளாரே' என, நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு உதயகுமார், 'இதுவரை, நாங்கள், தினகரனுக்கு பல்லக்கு துாக்கினோம். தொடர்ந்து பல்லக்கு துாக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்த்தனர். நாங்கள், பல்லக்கு துாக்காததால், அரசுக்கு எதிரான, குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். ஆனால், தொண்டர்களாலும், ஒரு இயக்கத்தை, தொடர்ந்து நடத்த முடியும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், கட்சியை திறம்பட வழி நடத்தி செல்கின்றனர்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தினகரனுக்கு பல்லக்கு துாக்கினோம் என ஒத்துக் கொள்கிறாரே... அதற்காக, அமைச்சர் உதயகுமாரைப் பாராட்டணும்...' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ' கூவத்தூர் கொண்டாட்டங்களில்' கூடியிருந்து குளிர்ந்திருந்துவிட்டு இப்போது பரம யோக்கியர்கள் போல் நாடகமாடினால், அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலமே தினகரனுக்கு அடுத்த பிரம்மாஸ்திரம் ஆகிவிடும் குட்டி குறைத்து தாய் தலையில் வைத்த கதைதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement