Advertisement

'டிவி' மேட்டரை, 'போட்டு' உடைச்சுட்டாரே...!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில், பிரதமரின் தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் நடந்த ஊழலை கண்டித்து, பா.ஜ., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அதை தடுக்க, திண்டிவனத்தில், சமரசக் கூட்டம் நடந்தது. அதில், பா.ஜ., இளைஞரணி மாநில துணைத் தலைவர், மூர்த்தி, 'மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர், புதுமனை புகுவிழா நடத்தினார். பஞ்சாயத்து ஊழியர்கள் இணைந்து, 50 அங்குல, 'டிவி'யை, அவருக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளனர். இந்த ஆட்சியில், பி.டி.ஓ., சர்வசாதாரணமாக, மெகா சைஸ், 'டிவி'யை இலவசமாக பெறுகிறார்' என்றார்.

அப்போது, துணை, பி.டி.ஓ., சிலம்புசெல்வன், 'நாங்கள், 38 அங்குல, 'டிவி' தான் தந்தோம்' என்றார். பஞ்சாயத்து ஊழியர் ஒருவர், 'லஞ்சமாக, 'டிவி' வாங்கவில்லை என, துணை, பி.டி.ஓ., வாதிடுவார் என நினைத்தால், அவரே விஷயத்தை, 'போட்டு' உடைச்சுட்டாரே' என கடுப்புடன் கூற, மற்றவர்கள், துணை பி.டி.ஓ.,வை வசைபாடியபடியே நடையை கட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement