Advertisement

'காங்., மேடை ஆட்டம்; சஞ்சய் தத் காட்டம்!'

'காங்., மேடை ஆட்டம்; சஞ்சய் தத் காட்டம்!'
மாவட்ட காங்கிரஸ் மாநாடு, கோவையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக, கட்சியின் தேசிய செயலர், சஞ்சய் தத் பங்கேற்றார். மேடை ஏறிய அவரை, பின் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்டோர் ஏறினர். எடை தாங்காமல், மேடை, 'கிடுகிடு' வென ஆட துவங்கியது. அதை உணர்ந்த, மாநகர மாவட்ட தலைவர், மயூரா ஜெயக்குமார், 'மேடை ஆடுது, அசிங்கம் ஆயிடும்; 'ப்ளீஸ்' எல்லாரும் கீழே இறங்குங்க' என்றார். நிலைமையை புரிந்த, சஞ்சய் தத் வேகமாக கீழே இறங்கி, சேரில் அமர்ந்து கடுப்பாக இருந்தார்.

கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'சஞ்சய் தத்துக்கு, தமிழ் புரியாவிட்டாலும், மேடை ஆட்டத்தை கண்டு, தமிழக காங்கிரசும் இப்படி தானோ என எண்ணி, வேகமாக கோபத்துடன் கீழே இறங்கிட்டாரோ...' எனக் கூற, மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    காங்கிரஸ் aattam kandu pallaandukal aayitru Medai mattumthaan ippothu aadukirathu

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement