Advertisement

சிவாஜிக்கு காங்கிரசார் எப்பவோ, 'டாட்டா!'

நடிகர் சிவாஜியின், 90வது பிறந்த நாள் விழா, சென்னை அடையாறில் நடந்தது. ம.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, 'அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, உலக தமிழ் மாநாடு நடந்தது. அப்போது, சென்னை கடற்கரையில், திருவள்ளுவர் சிலை அமைக்கும் பொறுப்பை, சிவாஜியிடம், அண்ணாதுரை வழங்கினார். திருவள்ளுவர் அமர்ந்திருப்பது போன்ற சிலை தான் முதலில் இருந்தது. ஆனால், கடற்கரையில் உள்ள, திருவள்ளுவர் சிலை, நிற்பது போல அமைந்திருக்கும். அந்த சிலைக்கு, மாடலாக இருந்தவர், சிவாஜி' என்றார்.

சிவாஜி ரசிகர் ஒருவர், 'காங்கிரஸ் தலைவர்கள் மறந்த தகவலை, மாற்று கட்சியைச் சேர்ந்த, மல்லை சத்யா பதிவு செய்கிறாரே...' என்றதும், மற்றொரு தொண்டர், 'சிவாஜியை, காங்கிரசார் மறந்து ரொம்ப நாளாச்சு' என கூறியபடி நடையை கட்டினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தேர்தல் வந்தால் காங்கிரேஸ்ஸர் சிவாஜிமன்றப்பிள்ளைகளை கூப்பிட்டு வேலை வாங்கிவிட்டு மறந்துவிடுவது காலம் காலமாக உள்ள வழக்கமே சிவாஜிக்காலத்திலே இதுதான் நடக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement