Advertisement

'ஆட்சியை மறந்து பேசுறாரே அமைச்சர்!'

லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை, நாகை அடுத்த வடவூரில் திறந்து வைத்த, தமிழக கைத்தறி துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன், 'நான், எம்.பி.,யாக இருந்தபோது, தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டுதோறும், 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

'அப்போதெல்லாம், 2 லட்சம் ரூபாயில், இரண்டு வகுப்பறைகள் கட்டி விடலாம். இப்போது, எனக்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியாக, 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு அங்காடி கட்டவே, 10 லட்ச ரூபாய் செலவாகிறது. ஆண்டுக்கு ஆண்டு, கட்டடம் கட்ட ஆகும் செலவு எகிறியபடி இருக்கிறது. இப்போதெல்லாம் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி தான் என்பதை மறந்து, விலைவாசி உயர்வை பற்றி, அண்ணன் பேசுறாரே... தலைமை மீது, ஏதும் வெறுப்பா இருக்காரோ...' எனக் கூற, மற்ற நிருபர்கள், நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    His worries are about shortage 'keeping aside'. Commission, since the contractors will also tell the same reason when he demands for commission

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement