Advertisement

'மீம்ஸ்'க்கு இரையாக மாட்டார் நடராஜன்!

சர்வதேச சுற்றுலா தின விழா, மதுரையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன், மதுரை நகர் பழமை குறித்தும், தன் குடும்பத்தினருக்கும், மதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேசினார். மாநில அளவில், புதிய சுற்றுலா திட்டங்கள் எதையாவது, அமைச்சர் அறிவிப்பார் என, நிருபர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், உள்ளூர் சுற்றுலா திட்டங்கள் குறித்து கூட, அவர் பேசவில்லை.

மூத்த நிருபர் ஒருவர், 'இருக்கற தமிழக அமைச்சர்களில், ரொம்ப சுதாரிப்பான ஆளா, நடராஜன் மாறிட்டாரே... கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு மாதிரி, எதையாவது கூறி, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' போன்ற சமூக வலைதளங்களுக்கு இரையாகி விடக் கூடாது என, உஷாராக இருக்காரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், அதை ஆமோதித்துச் சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    As a chief guest, very cautiously he escaped comments with one or two words Has learned lesson from his cabinet colleagues

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement