Advertisement

'தலைதெறிக்க ஓட விடுறாரு ஜெயகுமார்!'

தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு பொன் விழா, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசைக் குழுவினர், எம்.ஜி.ஆர்., பட பாடல்களை பாடினர்.

அப்போது, குஷியான, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் மேடையேறி, யாரை பற்றியும் கவலைப்படாமல், எவ்வித கூச்சமும் இன்றி, ரிக் ஷா காரன், ஒளி விளக்கு உள்ளிட்ட படங்களில் இடம் பெற்ற பாடல்களை, பின்னணி பாடகி, பி.சுசீலாவுடன் சேர்ந்து பாடினார்.

கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'ஒவ்வொரு மாவட்ட செயலரும், கஷ்டப்பட்டு, வண்டி பிடிச்சு, ஆட்களை அழைச்சு வந்திருக்காங்க... பாட்டு பாடி, தொண்டர்களை தலைதெறிக்க ஓட விடுறாரே ஜெயகுமாரு...' எனக் கூற, மற்றவர்கள், விழுந்து விழுந்து சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    If he wants to relax, he should sing in his bath room New type of torture to the mob

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement