Advertisement

வைகோவை விட தினகரன், 'டேஞ்சர்!'

காங்கிரஸ், தி.மு.க., கட்சிகளை, இலங்கை போர் குற்றவாளி கட்சிகளாக அறிவிக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், விழுப்புரத்தில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. அமைச்சர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர் கனவுடன் உலா வருகிறார். உள்ளடி வேலை பார்க்கும் ராசி படைத்த, வைகோ, அங்கு இருக்கும் வரை, அது பலிக்காது. தி.மு.க., எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரக் கூடாது என நினைப்பவர், வைகோ. எனவே, ஸ்டாலினை முதல்வராக விடாமல், அவர் பார்த்துக் கொள்வார்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க, தினகரன் தொடர்ந்து உள்ளடி வேலை பார்க்கிறார். வைகோவை விட, தினகரன் ரொம்பவும் ஆபத்தானவர். அவரை நீங்கள் சரியா கவனிங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் தலையசைத்து ஆமோதித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement