Advertisement

பக்க வாத்தியம்

'தி.மு.க.,வினரிடம் பாராட்டு பெற்ற அமைச்சர்'


சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், 'ஊழியர்கள் இட மாறுதல், அரசியல் குறுக்கீடு இல்லாமல், வெளிப்படையாக நடக்கிறது; தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளே, இதற்காக என்னைப் பாராட்டியுள்ளனர். 'மின் வாரியம், சிறப்பாக செயல்படுவதை, தங்கள் கட்சி சங்க நிர்வாகிகளிடமே, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கேட்டு தெரிந்து கொள்ளலாம்... அதை விடுத்து, அவர், அரசியல் ஆதாயத்திற்காக, என் மீது, தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்' என்றார்.இதை கேட்ட அதிகாரி ஒருவர், 'தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர், தக்க பதில் அளித்து விட்டார். தி.மு.க., சங்க நிர்வாகிகளிடம், பாராட்டு பெற்ற ஒரே மின் துறை அமைச்சர், இவராகத் தான் இருக்க முடியும்' எனக் கூற, மற்றவர்கள் தலையசைத்து, அதை ஆமோதித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement