Advertisement

பக்க வாத்தியம்

'எம்.பி.,க்களுக்கு ஞானோதயம் ரொம்ப, 'லேட்!'



ரயில்வே திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த, எம்.பி.,க்கள் கூட்டம், மதுரையில் நடந்தது. திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளை சார்ந்த, 38 எம்.பி.,க்களில், 13 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

சிவகங்கை தொகுதி, அ.தி.மு.க., - எம்.பி., செந்தில்நாதன், 'காரைக்குடி -- பட்டுக்கோட்டை ரயில்வே வழித்தடத்தில், 10க்கும் மேற்பட்ட, லெவல் கிராசிங்குகள் உள்ளன. இவற்றில், ஊழியர்கள் இல்லாததால், ரயில் இன்ஜின் டிரைவரே ரயிலை நிறுத்தி, கேட்டை மூடி திறக்கிறார். இதனால், ரயில் தாமதமாக, காரைக்குடிக்கு வருகிறது. காரைக்குடியிலிருந்து, கரூர் வழியாக, கோவைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்துகிறோம்; ஆனால், அதை நிறைவேற்றவில்லை' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு மேல் வாய்மூடி மவுனியாக இருந்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, இப்போது தான், தமிழக நலன் குறித்து ஞானோதயம் பிறக்கிறது...' எனக் கூற, மற்றவர்கள் அதை ஆமோதித்து, தலையசைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்த பதின்மூன்றுபேரும் கண்டிப்பாக தேர்தலில் நின்றாள் தோல்வி உறுதி என்ப தால் எதற்கு அலைச்சல் என்று உள்ளனர் மேலும் பலதலைமுறைக்கு சேர்த்துவிட்டதால் கவலை indri உள்ளனர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement