Advertisement

'டவுட்' தனபாலு

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்: பழனிசாமி அரசு, இன்னும், 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை.

டவுட் தனபாலு: எதை வைத்து, இப்படிச் சொல்றீங்க... 'தேர்தலுக்கும், கட்சியைத் துவக்குவதற்கும், இன்னும் காலம் கிடக்குது'ன்னு, சொல்லிட்டு, படப்பிடிப்பில், 'பிஸி'யாக இருந்து வரும், ரஜினிக்கு, இந்தத் தகவலைச் சொன்னீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்:பா.ஜ., ஆட்சியில், சிறுபான்மை, மலைவாழ் மக்கள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பு மக்களும், அச்சத்தில் வாழ்கின்றனர். சிறு குறு தொழில்கள்முடங்கியுள்ளன.


டவுட் தனபாலு: நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தால், நாட்டுல, ஒன்றிரண்டு சதவீத மக்கள் கூட, மகிழ்ச்சியாக இல்லைங்கற மாதிரி ஆகுதே... அப்புறம் ஏன், தொடர்ந்து,காங்கிரசை யாரும்ஆதரிக்காமல் இருக்காங்க... மீண்டும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு, ஆட்சி புரிந்தீங்களா... 'அதற்கு, இதுவே தேவலை'ன்னு, மக்கள் நினைக்குறாங்களோ,என்பது தான், என்னோட, 'டவுட்!'

த.மா.கா., தலைவர் வாசன்:காமராஜர் ஆட்சியில், பொதுநல அரசியல் இருந்தது. இன்றைக்கு, சுயநல அரசியல் தான் இருக்கிறது.



டவுட் தனபாலு: 'மத்திய அமைச்சராக இருந்தபோது, அமைதியா இருக்காங்க... கட்சிக்கு வீழ்ச்சி ஏற்படும்னு கணித்து விட்டால், பதவிக்காலம் முடிந்ததும், தனிக்கட்சி துவங்கிடுறாங்க... கேட்டால், தமிழக காங்கிரசில், காமராஜருக்கு முக்கியத்துவம் கொடுக்கலைன்னு குற்றஞ்சாட்டுறாங்க... இது, சுயநல அரசியல் இல்லையா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement