Advertisement

'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: ஸ்டாலின் குறித்து, ம.தி.மு.க., தொண்டர்கள், சமூக வலை தளங்களில் எந்த விமர்சனமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்பவர்கள், ம.தி.மு.க., நலனுக்கு பெருங்கேடு செய்பவர்கள் ஆவர்.


டவுட் தனபாலு: 'கோபமோ, அதிருப்தியோ இருந்தால், அதை, நேரடியாக என்னிடம் இறக்கிவையுங்கள்... நான், வாங்கிக்கறேன்... தம்பி ஸ்டாலின் குறித்து ஏதும் பேசி, கூட்டணிக்கு உலைவைத்திடாதீங்க... தற்போது நம்ம கட்சியே, அவரின் நலனில் தான் இருக்கு'ன்னு, வெளிப்படையாகவே சொன்னால் என்னங்கறது தான், மக்களின், 'டவுட்!'


ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா: அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, காங்கிரசுடன் இணையும் கட்சிகளின் முடிவில் தெளிவில்லை. பா.ஜ.,வுக்கு எதிராக தலைமை ஏற்கும் அளவுக்கு செல்ல மாட்டேன்.



டவுட் தனபாலு: காங்., தயவில், கர்நாடகா முதல்வராக இருக்கும் உங்க மகன் குமாரசாமி, 'நான் சந்தோஷமாக இல்லை'ன்னு, கண்ணீர்விட்டுக் கதறுறாரு... நீங்களோ, பா.ஜ.,வுக்கு எதிராக தலைமை ஏற்கும் அளவுக்குப் போக மாட்டேன்னு சொல்றீங்க... காங்.,கை அடக்கிவைக்க, இருவரும், இப்படிப் பேசுறீங்களா... இல்லை, பா.ஜ.,வுக்கு, பச்சைக்கொடி அசைக்குறீங்களா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!


-காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்: தமிழகத்தில், மதுக்கடைகளை மூட, அனைவரும் இணைந்து, போராட வேண்டும்.

டவுட் தனபாலு: மற்றவர்களை போராட அழைக்குறது எல்லாம் இருக்கட்டும்... நாளும்பொழுதும் நீங்க முதல்வர் நாற்காலியில் அமரவைக்கத் துடிக்கும் ரஜினி, இந்த விஷயத்துக்காக குரலாவது கொடுப்பாரா என்பதுதான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Etho congresukku seet pichai podum pothu namakum etho koduppaar athai keduthuvidavendaam enru Sulla varugiraaro

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement